• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மதவாத கண்ணோட்டத்தோடு பார்க்கக் கூடாது; சுகிர்தா, பாமா படைப்புகளை மீண்டும் சேர்க்கவேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

மதவாத கண்ணோட்டத்தோடு பார்க்கக் கூடாது; சுகிர்தா, பாமா படைப்புகளை மீண்டும் சேர்க்கவேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

எழுத்தாளர் பாமா, சுகிர்தா ராணி படைப்புகளை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

  • Share this:
    எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணி ஆகியோரின் எழுத்துகளைக் கட்சி அரசியல், மதவாதக் கண்ணாடிகள் அணிந்து பார்க்கும் வழக்கத்தைக் கைவிட்டு, அவற்றை டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்த்திட வேண்டும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கில பாடத்திட்டத்தில், பிரபல தலித் எழுத்தாளர்களின் படைப்புகள் இரவோடு இரவாக நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், தமிழக எழுத்தாளர்கள் பாமா, சுகிர்தராணியின் படைப்புகளும், பிரபல எழுத்தாளர் மகா ஸ்வேதா தேவியின் திரௌபதி படைப்பும் நீக்கப்பட்டுள்ளன. தலித் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தன்னுடைய படைப்பு டெல்லி பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னனிக் காரணம் சாதிய பாகுபாடே என்று எழுத்தாளர் சுகிர்தராணி குற்றச்சாட்டியுள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்தாளர் பாமாவின் சங்கதி, தமிழ்க் கவிஞர் சுகிர்தராணியின் கைம்மாறு, என்னுடல் ஆகிய மொழியாக்கப் படைப்புகளை அந்தத் துறை பேராசியர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமலேயே மேற்பார்வைக் குழுவின் ஆலோசனையின் பெயரில் பல்கலைக்கழக நிர்வாகம் நீக்கியிருப்பது ஒருதலைப்பட்சமான முடிவு. இது எவ்வகையிலும் ஏற்க முடியாத செயலாகும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பெண்கள் உரிமை - ஒடுக்கப்பட்டோர் விடுதலை - மானுட மேன்மை குறித்து பல படைப்புகளை வழங்கி வரும் எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணி ஆகியோரின் எழுத்துகளைக் கட்சி அரசியல் - மதவாதக் கண்ணாடிகள் அணிந்து பார்க்கும் வழக்கத்தைக் கைவிட்டு, அவற்றை டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்த்திட வேண்டும் எனப் பல்கலைக்கழக நிர்வாகத்தையும் மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: