முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திமுக எம்.எல்.ஏவின் உரையை திருத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுக எம்.எல்.ஏவின் உரையை திருத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது தவறாக பேசிய தி.மு.க எம்.எல்.ஏவின் உரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருத்தினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்றுவருகிறது. நேற்று, ஆளுநர் உரையுடன் தொடங்கிய கூட்டத் தொடரில் இன்று ஆளுநர் உரை மீதான விவாதங்கள் நடைபெற்றன.

ஆளுநர் உரை மீது பேசிய தி.மு.க எம்.எல்.ஏ உதயசூரியன், ‘நிதி நெருக்கடியில் பல சுமைகளை தாங்கி ஆட்சிக்கு வந்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கொரனா பேரிடர் காலத்தில் முந்தைய ஆட்சிகாலத்தில் மக்களுக்கு தேவையான வசதிகளை அறிவிக்காமல் ஊரடங்கை அறிவித்தனர். ஐந்தாயிரம் ரூபாய் வழங்குங்கள் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய நிலையில் கடந்த அரசாங்கம் ஆயிரம் ரூபாய் மட்டுமே நிவாரண தொகையாக வழங்கியது. நான்காயிரம் தருவேன் என மு.க.ஸ்டாலின் சொன்னார். சொன்னபடி இரண்டு தவணைகளாக மக்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது’ என்று பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து பேசிய அவர், ‘நீட்டில் விலக்கு என்று பேசுவதற்கு பதிலாக நீட்டை உருவாக்குதல்’ என்று பேசினார். அதனையடுத்து, தி.மு.க உறுப்பினர் உதயசூரியன் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் நீட்டை உருவாக்குவதற்கு என்ற தவறான வார்த்தையை பதட்டத்தில் பயன்படுத்தி விட்டார். அதனை நீட்டில் இருந்து விலக்கு பெறுவதற்காக என மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். முதல்வர் கேட்டதற்கினங்க பேரவை தலைவர் அப்பாவு மாற்றம் செய்தார்.

First published:

Tags: DMK, MKStalin, TN Assembly