Home /News /tamil-nadu /

மக்களின் மனஅழுத்தத்துக்கு இயற்கையான மாமருந்து - மு.க.ஸ்டாலின் உருக்கம்

மக்களின் மனஅழுத்தத்துக்கு இயற்கையான மாமருந்து - மு.க.ஸ்டாலின் உருக்கம்

எஸ்.பி.பி, ஸ்டாலின்

எஸ்.பி.பி, ஸ்டாலின்

மக்களின் மன அழுத்தத்துக்கு இயற்கையான மாமருந்து என்று எஸ்.பி.பாலசுப்ரமணியன் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    கொரோனா பாதிப்பால் நுரையீரல் பாதிக்கப்பட்டு ஒரு மாதத்துக்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் இன்று மதியம் 1.04 மணிக்கு உயிரிழந்தார். அவருடைய உயிரிழப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆளாக்கியுள்ளது. அவரது மறைவுக்கு குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் கடிதத்தில், ‘இந்தியாவின் பல மொழிகளிலும் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய ‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் நம்மை விட்டு பிரிந்துவிட்டார் என்பதை ஏற்க மறுக்கிறது மனம். கொரோனா கொடுங்காலம் நம்மிடமிருந்து அற்புத இசைக் கலைஞனைப் பிரித்துவிட்டது.

    பரபரப்பான உலகில் மக்களின் மன அழுத்தத்துக்கு இயற்கையான மாமருந்து எஸ்.பி.பி. 15 இந்திய மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியதுடன், பல படங்களுக்கு இசையமைத்தும், திரைப்படங்களில் நடித்ததும், பிரபல நடிகர்களுக்கு மாற்றுக்குரல் கொடுத்தும் பல்துறை வித்தகராக விளங்கியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

    ’இசையாய் மலர்வேன்’ - 50 ஆண்டுகளுக்கும் மேலாக இல்லந்தோறும் உள்ளங்களை வசீகரித்த கானக்குயில் எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் வாழ்வு..

    இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் விருதுகள் மற்றும் பல மாநில அரசுகள், திரைத்துறை விருதுகளால் பெருமை பெற்றவர். கருணாநிதியின் அன்புக்குரியவர். தம்பி சரண் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையினருக்கும் ரசிகர்களுக்கும் தி.மு.க சார்பில் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.



    காலம் அவரைப் பிரித்தாலும், காற்றில் தவழ்ந்து கொண்டிருக்கிறது அவரது தேன்குரல். என்றும் இளமை மாறாத அந்த இனிய குரல் தந்த பாடல்களால் என்றென்றும் உயிர்த்திருப்பார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: M.K.Stalin, S.P.Balasubramaniyam

    அடுத்த செய்தி