Home /News /tamil-nadu /

அருணகிரி நாதரின் மறைவு ஆன்மீகவாதிகளுக்கு பேரிழப்பு - முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

அருணகிரி நாதரின் மறைவு ஆன்மீகவாதிகளுக்கு பேரிழப்பு - முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மதுரை ஆதினமாக இருந்த அருணகிரி நாதரின் மறைவு ஆன்மீகவாதிகளுக்கும், சைவ சமயத் தொண்டிற்கும் பேரிழப்பாகும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    மதுரை ஆதினமாக இருந்தவர் அருணகிரி நாதர். இவர் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்றைக்கு முன்தினம் காலை முதல் அவரது உடல்நிலை கவலைக்கிடம் ஆனதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவிந்திருந்தது. இந்நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மதுரை ஆதினம் காலமானார்.

    மதுரை ஆதினம் மறைவு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் கடிதத்தில், ‘மதுரை ஆதினம் அருணகிரிநாதர் உடல்நலக் குறைவால் மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு மிகுந்த துயரத்துற்குள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    1,500 ஆண்டுகள் பழமைமிக்க மதுரை ஆதினத்தின் 292-வது பீடாதிபதியாக சைவ, சித்தாந்தத்தை பரப்பும் ஆன்மீகப் பணியில் அருந்தொண்டாற்றியவர். மிகச் சிறந்த பத்திரிகையாளராகவும் விளங்கிய மதுரை ஆதினம் பல்வேறு மக்கள் சார்ந்த பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தமிழ்நாட்டு மக்களின் பேரன்பிற்கு உரியவராகத் திகழ்ந்தார். அவரது மறைவு ஆன்மீகவாதிகளுக்கும், சைவ சமயத் தொண்டிற்கும் பேரிழப்பாகும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மதுரை ஆதினம் அருணகிரிநாதர் மறைவால் வாடும் ஆன்மீகப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: MKStalin

    அடுத்த செய்தி