Home /News /tamil-nadu /

தி.நகரில் தண்ணீர் தேங்கியதற்கு அ.தி.மு.கவே காரணம்- சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தி.நகரில் தண்ணீர் தேங்கியதற்கு அ.தி.மு.கவே காரணம்- சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

அ.தி.மு.க ஆட்சியில் விதிகளை மீறி ஸ்மார்ட் சிட்டி திட்டம் நடைமுறைப்படுத்தியதே தியாகராய நகரில் தண்ணீர் தேங்கியதற்கு காரணம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

    அதிமுக ஆட்சியில் விதிமுறைகளை கடைபிடிக்காமல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்தியதே சென்னை தியாகராய நகர் பகுதியில் மழைநீர் தேங்கியதற்கு காரணம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

    ஆளுநர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, மழைநீர் தேங்கியதற்கு அதிமுக ஆட்சிதான் காரணம் என முதல்வர் குற்றம் சாட்டுவதாக பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். அப்போது அவர், ‘அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டம் அறிவிக்கப்பட்டு சென்னை தியாகராய நகர் பகுதியில் செயல்படுத்தப்பட்டது. பல ஆண்டுகளாக தி.நகர் பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது இல்லை. காரணம் மாம்பலம் கால்வாயோடு இணைத்து வைத்திருந்தோம். செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்ட போதும் கூட தியாகராய நகர் பகுதியில் தண்ணீர் தேங்கியது இல்லை. ஆனால் இப்போது பெய்த மழையில் தி.நகரில் மழை நீர் தேங்கியதற்கு அங்கிருந்த கால்வாய்களை அகற்றி, பிளாட்பாரத்தை உயர்த்தி, எதைப்பற்றியும் கவலைப்படாமல் நிறைவேற்றியதாலேயே தண்ணீர் தேங்கியதற்கு காரணம்.

    பல்கலைக்கழகங்க துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் தீர்மானம் : முதலமைச்சர் தகவல்



     நீங்கள் செய்த கோளாறு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் செயல்படுத்தும் போது என்னென்ன விதிமுறைகள் இருக்கின்றன அதை எல்லாம் கடைபிடிக்காமல் கட்டியதே இந்த நிலை ஏற்பட்டதற்கு காரணம்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரமாரியாக குற்றம் சாட்டினார்.

    அப்போது பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக உடைக்கப்பட்ட கட்டி கழிவுகள், மாம்பலம் கால்வாயில் கொட்டியதன் காரணமாகவே தி.நகரில் மழை நீர் தேங்கியது என்றார். மீண்டும் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, 5 மாத கால இடைவெளியில் தமிழக அரசு மாம்பலம் கால்வாயை பார்வையிட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: ADMK, MKStalin

    அடுத்த செய்தி