முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சென்னையை 10 ஆண்டுகளாக அ.தி.மு.க குட்டிச் சுவராக்கியுள்ளது - முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னையை 10 ஆண்டுகளாக அ.தி.மு.க குட்டிச் சுவராக்கியுள்ளது - முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Chennai Rains | சென்னையை 10 ஆண்டுகளாக அ.தி.மு.க குட்டிச் சுவராக்கியுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சென்னையில் நேற்று தொடர்ச்சியாக 5 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையின் காரணமாக சென்னை நகரம் முழுவதும் ஸ்தம்பித்தது. சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

அதனையடுத்து, நேற்றைய தினம் திருச்சியிலிருந்து சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நள்ளிரவிலேயே மாநகராட்சி பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மழை பாதிப்பு எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறது. எங்கெல்லாம் மழைநீர் தேங்கி இருக்கிறது. மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை, மோட்டார்கள் மூலம் எத்தனை இடங்களில் தண்ணீர் வெளியேற்றப்படுகின்றன போன்றவற்றை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

சென்னையில் மழை பாதிப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘கடந்த 10 வருட ஆட்சியில் அ.தி.மு.க எதுவும் செய்யவில்லை. சென்னையை 10 ஆண்டுகளாக குட்டிச்சுவராக்கி வைத்துள்ளதால்தான் மழைநீர் இப்படி தேங்குகிறது. அடுத்த பருவ மழைக்குள் மீண்டும் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை- போக்குவரத்து நெரிசலில் திணறும் மக்கள்

சென்னையில் பெய்த இந்த கனமழையை வானிலை ஆய்வு மையம் துல்லியமாக கணிக்காதது குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது, “வானிலையை துல்லியமாக கணிக்கும் இயந்திரங்கள் தேவைப்படுகிறது. இதுகுறித்து மத்திய அரசுக்கு நினைவூட்டுவோம்” என்றார் முதல்வர் ஸ்டாலின். பின், “ஆங்கில புத்தாண்டு நாளான ஜனவரி 1-ம் தேதியன்றி என்னை சந்திப்பதற்காக நேரில் வருவதை தவிருங்கள். ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதில் திமுகவினர், பொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்நோக்குகிறேன்” என்றார்.

மேலும் சென்னை மாநகர் முழுவதும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் விரைந்து சீர்செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ரிப்பன் மாளிகையில் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர், ரிப்பன் மாளிகையை சுற்றிலும் தேங்கிய மழை நீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியை பார்வையிட்டார். அதேபோல பெரியமேடு, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள சாலையில் மழை நீரை வெளியேற்றும் பணியை முதல்வர் ஆய்வு செய்தார்.

First published:

Tags: Chennai rains