• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழவேண்டும் - பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழவேண்டும் - பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

நரேந்திர மோடி - மு.க.ஸ்டாலின்

நரேந்திர மோடி - மு.க.ஸ்டாலின்

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • Share this:
    பிரதமர் நரேந்திர மோடியின் 71-வது பிறந்தநாள் இன்று. மோடியின் 71-வது பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாடுவதற்கு பா.ஜ.கவினர் தயாராகிவருகின்றனர். 71-வது பிறந்தநாளை முன்னிட்டு உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியிலுள்ள பாரத் மாதா கோயிலில் 71,000 விளக்குகளை ஏற்றி பூஜை செய்ய பா.ஜ.கவினர் முடிவு செய்துள்ளனர்.

    அதேநேரத்தில், பா.ஜ.கவினர் நன்றி மோடிஜி என்ற எழுத்துப் பொறிக்கப்பட்ட ரேஷன் பையை நாடு முழுவதும் 14 கோடி பேருக்கு வழங்குவதற்கு முடிவு செய்துள்ளனர். அதைத்தொடர்ந்து நாடு முழுவதுமுள்ள அஞ்சல் அலுவலகத்திலிருந்து மோடி உருவம் பொறிக்கப்பட்ட 3 கோடி அஞ்சல் அட்டைகளை அனுப்புவதற்கு முடிவு செய்துள்ளனர். இன்று நாடு முழுவதும் பிரதமர் மோடியின் பிறந்தநாளை பா.ஜ.கவினர் கொண்டாடிவருகின்றனர்.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இன்று பிரதமர் மோடிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இந்தநிலையில், பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், ‘மதிப்பிற்குரிய நம்முடைய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: