மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் - ராகுல் காந்தி, கமல்ஹாசன் வாழ்த்து

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் - ராகுல் காந்தி, கமல்ஹாசன் வாழ்த்து

ராகுல், ஸ்டாலின், கமல்

மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ராகுல் காந்தி, கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  • Share this:
கருணாநிதி - தயாளு அம்மாளின் மகனாக, 1953ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி பிறந்த மு.க.ஸ்டாலினுக்கு இன்று 69-வது பிறந்தநாள். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை தி.மு.கவினர் சிறப்பாக கொண்டாடிவருகின்றனர். பிறந்தநாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் காலையிலேயே சென்னை மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்று மலர்வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு எழுப்பூரிலுள்ள பெரியார் நினைவிடத்துக்கு வந்து மரியாதை செலுத்தினார். மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

இதுதொடர்பான கமல்ஹாசன் ட்விட்டர் பதிவில், ‘விருட்சத்தின் கீழ் தாவரங்கள் வெளிச்சம் பெறுவதரிது. விழுதாக இருந்தால் கூடுதல் சுமை. கலைஞர் எனும் மாபெரும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் மு.க.ஸ்டாலினை, பிறந்த நாளில் வியந்து வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறிய ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவில், ‘தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும் மற்றும் மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: