கேரளாவில் கொட்டித்தீர்க்கும் கனமழை காரணமாக மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கனமழை, நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக பொதுமக்கள் சொல்லில் அடங்கா துயருக்கு ஆளாகியுள்ளனர். நிலச்சரிவின் காரணமாக வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. வெள்ள நீரில் ஆற்றங்கரையோரம் உள்ள வீடுகள் அடித்துச்செல்லப்படும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப்பணிகளை மாநில அரசு துரிதப்படுத்தியுள்ளது.
இடுக்கி மாவட்டம் கொக்காயர் கிராமத்தில் நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணியில் பேரிடர் மேலாண்மை குழுவினர் ஈடுபட்டனர். அப்போது 10 வயதுக்குட்பட்ட 3 குழந்தைகள் கட்டியணைத்தவாறு சடலங்களாக மீட்கப்பட்டனர். இந்தக் காட்சிகள் காண்போரை கண்கலங்கச் செய்தது. குழந்தைகள், அம்னா(வயது 7), அஃப்சான் (வயது 8), மற்றும் அஹியன் ( 4) எனத் தெரியவந்தது. இதுவரையில் வெள்ளத்தில் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. ஏராளமான மக்கள் நிவாரண மையங்களில் தங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தநிலையில் இடுக்கி அணை நிறைந்து வருவதன் காரணமாக நாளை திறக்கப்படும் என்று அம்மாநில அமைச்சர் ரோஸி அகஸ்டின் தெரிவித்துள்ளார்.
இன்னும் அக்டோபர் 20 முதல் 22 வரையில் கனமழை இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தி.மு.க சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Published by:Karthick S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.