சூறாவளி பிரசாரத்தில் ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் கெட்டுப்பபோன ரத்தத்தை செலுத்தியதன் மூலம் 15 கர்ப்பிணிகள் உயிரிழந்துள்ளனர். அதற்கு முதலமைச்சர் பழனிசாமியே காரணம் என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

சூறாவளி பிரசாரத்தில் ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
திமுக செயல் தலைவர் ஸ்டாலின்
  • News18
  • Last Updated: April 17, 2019, 3:08 PM IST
  • Share this:
நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் சூறவாளி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி:

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் பழனிசாமி கடந்த 5 நாட்களாக சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சாம் பால், தென் சென்னை தொகுதியில் மீண்டும் களமிறங்கியுள்ள ஜெயவர்தன் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது திறந்த வேனில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாகக் கூறினார்.


சென்னையை குற்றமில்லாத மாநகராக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி பேசினார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பதாகக் கூறிய முதலமைச்சர் பழனிசாமி, திமுக ஆட்சிக்கு வந்தால் அராஜகம் அதிகரித்துவிடும் என்றும் குற்றம்சாட்டினார். மேலும், சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக அதிமுக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மு.க.ஸ்டாலின் பிரசாரம்:

திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வேலுச்சாமி, நிலக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடும் சவுந்தரபாண்டியன் ஆகியோரை ஆதரித்து திமுக கூட்டணிக் கட்சி சார்பில் திண்டுக்கல்லில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்றுப் பேசிய மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் கெட்டுப்போன ரத்தத்தை செலுத்தியதன் மூலம் 15 கர்ப்பிணிகள் உயிரிழந்திருப்பதற்கு முதலமைச்சர் பழனிசாமியே காரணம் என்று குற்றம்சாட்டினார்.ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவர் நன்றாக இருப்பதாக தெரிவித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவருக்கு பாய்ஸன் கொடுத்து கொன்றுவிட்டதாக மாற்றிக் கூறினார் என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

சிதம்பரம் அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து சிதம்பரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு அடையாளத்தைக் கொடுத்ததே தான்தான் என்றார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:

அரக்கோணத்தில் திமுக சார்பில் களமிறங்கும் ஜெகத்ரட்சகனை ஆதரித்து வேலூர் மாவட்டம் ஆற்காடு, வாலாஜாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்:

ராமநாதபுரம் நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் அறிமுகக் கூட்டத்தில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பிரதமர் மோடியைப் போன்று நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய ஒரு நபரை இந்தியா முழுவதும் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது என்றார்.

தேனி தொகுதியில் போட்டியிடும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தரநாத் குமாரை ஆதரித்து அவரது மனைவி ஆனந்தி, சகோதரர் பிரதீப் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். பெரியகுளத்தில் கீழ வடகரைக்குட்பட்ட அழகர் சாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.

Also see... தேர்தல் 40/40: தருமபுரி தொகுதி ஒரு சிறப்பு பார்வை!
First published: March 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading