முகக்கவசம் அணியாதவரிடம் காரிலிருந்து இறங்கிவந்து முகக்கவசம் வழங்கி அணிய வலியுறுத்திய மு.க.ஸ்டாலின்

மாதிரிப் படம்

சென்னை கொளத்தூர் பகுதியில் சாலையில் முகக்கவசம் அணியாதவரைப் பார்த்த மு.க.ஸ்டாலின் முகக்கவசத்தைக் கொடுத்து அணிய வலியுறுத்தினார்.

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் மட்டுமல்லாது கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முகக்கவசம் கட்டாயம் என்பதை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றன.

  தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து பொதுமக்கள் முகக்கவசம் அணியும் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து வலியுறுத்திவருகிறார். அவரை, வீடியோ மூலம் முகக்கவசத்தை முறையாக அணிவது குறித்த விளக்க வீடியோவையும் வெளியிட்டார். மேலும், திரைப் பிரபலங்கள் மூலமாக முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து வீடியோ வெளியிடப்பட்டது.

  இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருடைய தொகுதியான கொளத்தூரில் கொரோனா பணிகள் குறித்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடித்துவிட்டு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்லும்போது அவரைப் பார்க்க ஏராளமானோர் சாலையில் இரு பகுதிகளிலும் நின்றுகொண்டிருந்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அப்போது வயதான தம்பதியினர் இருவர் முகக்கவசம் அணியாமல் இருந்ததைப் பார்த்த மு.க.ஸ்டாலின் காரை நிறுத்தச் சொல்லி இறங்கினார். அந்த தம்பதியிடம் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின், அவர்களிடம் முகக் கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி, சில முகக் கவசங்களை கொடுத்து அணிந்து கொள்ளுமாறு வலியுறுத்தினார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: