Home /News /tamil-nadu /

நல்லப் பெயரை வாங்கும் வகையில் செயல்படவேண்டும் - மேயர், துணை மேயர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

நல்லப் பெயரை வாங்கும் வகையில் செயல்படவேண்டும் - மேயர், துணை மேயர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

 மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மக்களிடம் நற்பெயரை வாங்கும் வகையில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் செயல்படவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

மக்களாட்சி தத்துவதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் தான் நம்பிக்கை. விதிமீறல்கள் ஏற்படாமல் உள்ளாட்சி பிரதிநிதிகள் பார்த்து கொள்ள வேண்டும் என முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான நிர்வாகப் பயிற்சி முகாம் நிறைவு விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். மேலும் இந்நிகழ்வில் ஆர்.எஸ் பாரதி, அமைச்சர் கே.என் நேரு, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘காலையில் துவங்கிய பயிற்சி முகாமை துவக்கி வைக்க என்னை அழைத்தார்கள். ஆனால் எனக்கு அந்தளவுக்கு அனுபவம் இல்லை என்பதால் முதல்வருடன் மாலை கலந்து கொள்கிறேன். நானும் முதல் முறையாக உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவன்.
முதல்வர் அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார். மேயர் என்றால் முதல்வர் தான் ஞாபகத்துக்கு வருவார். முதல்வரின் பெயரை காப்பற்ற நாம் அனைவரும் உழைக்க வேண்டும்’ என்றார்.

பின்னர் மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘மேயர்கள், துணை மேயர், நகராட்சித் தலைவர்கள், துணை தலைவர்களை எல்லாம் ஒரே இடத்தில் சந்தித்து கருத்துகளை சொல்ல இந்த பயிற்சி முகாம் நல்ல வாய்ப்பாக கிடைத்துள்ளது.
மக்களாட்சி தத்துவதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் தான் நம்பிக்கை. மக்களுக்காக மக்களுடன் உள்ளாட்சி பிரதிநிதிகள் இருக்க வேண்டும்.

கிடைத்திருக்கும் வாய்ப்புகளை உள்ளாட்சி பிரநிதிகள் வீணாக்கி விட கூடாது. உள்ளாட்சித் தேர்தலை சரியாக குறிப்பிட்ட காலத்தில் நடத்துவது தான் மக்களாட்சி தத்துவம். அதை திமுக அரசு சரியாக செய்து வருகிறது. உள்ளாட்சி பிரதிநிதிகளின் சிறப்பான செயல்பாடுகள் தமிழக மக்களுக்கு பயன்பட வேண்டும்.

தமிழக அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். பதவியாக இல்லாமல் பொறுப்பாக நினைத்து பணியாற்ற வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் நான். மேயர் பதவி முன்பெல்லாம் ஒரு வருடம் தான் இருந்தது. நான் மேயராகும் போது அந்த பதவி 5 ஆண்டாக மாறியது.

மக்களுக்கு சிறிய நன்மை செய்தால் பெரிய பெயரை வாங்கித் தரும். அதே நேரம் சிறிய தவறு செய்தாலும் பெரிய பெயர் வாங்கு தரும். உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒவ்வொரு நடவடிக்கையும் கவனமாக செய்ய வேண்டும். விதிமீறல்கள் ஏற்படாமல் உள்ளாட்சி பிரதிநிதிகள் பார்த்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தின் நிதி நிலை கடன், வட்டி குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்குத் தெரியும். எனவே அரசின் சார்பில் எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறதோ அந்த நிதியை கொண்டு அரசு திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். தரமான குடிநீர், சாலை, பாதாள சாக்கடை திட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள் கவனம் செலுத்த வேண்டும்.

நாள் தோறும் ஆய்வு செய்து மக்கள் கோரிக்கைகளை உள்ளளாட்சி பிரதிநிதிகள் கேட்க வேண்டும். மக்களோடு அதிகம் தொடர்பு வைத்து கொள்ளும் வாய்ப்பு கவுன்சிலர்களுக்கு கிடைக்கிறது. நல்ல பெயர் வாங்க வேண்டுமே தவிர கேட்ட பெயரை வாங்கி விட கூடாது.
நகர்ப்புற சேவைகளை மக்கள் அறிய வழிவகை செய்ய வேண்டும். தமிழகம் உள்ளாட்சி நிர்வாகத்தில் நல்லாட்சி செய்ய உள்ளாட்சி பிரதிநிதிகள் உழைக்க வேண்டும்.

ஆளுநர் விருந்தில் பங்கேற்கப்போவதில்லை- கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடர்ந்து திருமாவளவன் அறிவிப்பு

திராவிட மாடல் ஆட்சிக்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் உறுதுணையாக இருக்க வேண்டும். நகர்ப்புற சேவைகளை மக்கள் அறிய வழிவகை செய்ய வேண்டும். தமிழகம்  உள்ளாட்சி நிர்வாகத்தில் நல்லாட்சி செய்ய உள்ளாட்சி பிரதிநிதிகள் உழைக்க வேண்டும். மாநகராட்சி சார்பில் பாலம் கட்டியது கிடையாது.

1996 ல் நான் மேயராக இருந்த போது தான் சென்னையில் 10 மேம்பாலங்களை மாநகராட்சி கட்டி 10 பாலங்களை கட்டி கொடுத்த மேயராக திகழ்ந்தேன். அரசுக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி கொடுக்கும் சூழலை உள்ளட்சி பிரதிநிதிகள் உருவாக்க வேண்டும்.
இந்த ஆட்சியின் சாதனைகள் மக்களிடம் சேர்ந்துள்ளது. மக்கள் இந்த ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அதனை கருத்தில் கொண்டு உள்ளாட்சி பிரதிநிதிகள் செயல்பட்டு உழைக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Published by:Karthick S
First published:

Tags: DMK, MK Stalin

அடுத்த செய்தி