திருநெல்வேலியில் இன்று மாநாடு! சூடுபிடிக்கும் கமலின் அரசியல் பயணம்

ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர் சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நேற்று சந்தித்துப் பேசினார்.

திருநெல்வேலியில் இன்று மாநாடு! சூடுபிடிக்கும் கமலின் அரசியல் பயணம்
கமல்ஹாசன்
  • News18
  • Last Updated: February 24, 2019, 9:10 AM IST
  • Share this:
நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற இந்திய ஜனநாயக கட்சி. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இணைவதற்காக ஏற்கனவே அதிமுக தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.

ஆனால் அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக எந்த உறுதியும் அளிக்கப்படாத நிலையில் இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர் சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நேற்று சந்தித்துப் பேசினார்.


சுமார் ஒருமணி நேர சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், ’பாரிவேந்தர்வுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது.

மக்கள் நீதி மய்யம் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்புள்ளது. அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

விருப்பமனு வாங்குவது தொடர்பான அறிவிப்பு இன்று திருநெல்வேலியில் வெளியிடப்படும்’ என்றும் அவர் தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி ஒராண்டு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து திருநெல்லேயில், இன்று மாலையில் கட்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் மூலம் கமல்ஹாசன் அவரது தேர்தல் பணியை தீவிரமாக்கவுள்ளார்.Also see:

First published: February 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்