Stalin | 16 ஆயிரம் கிராமங்களில் 80 லட்சம் மக்களை சந்திக்க மு.க.ஸ்டாலின் திட்டம்

Youtube Video

அதிமுகவை நிராகரிப்போம் எனும் தலைப்பில் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கிராமசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. 

  • Share this:
    கட்சி துவங்கி 24 மணி நேரத்திற்குள் சிலர் ஆட்சிக்கு வந்துவிட நினைத்துக் கொண்டிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள குன்னம் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். அங்கு பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை ஆதாரத்துடன் ஆளுநரிடம் அளித்துள்ளதாக கூறினார்.

    மேலும் இது தொடர்பாக ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக தெரிவித்த ஸ்டாலின், 4 மாதத்தில் மக்கள் ஆதரவுடன் திமுக ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து, மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தங்கள் பகுதியிலிருக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் திமுக தலைவர் ஸ்டாலினிடம் வருத்தம் தெரிவித்தனர்.

    Bigil | பிகில் படக்குழுவினர் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட விவகாரம் (வீடியோ)

     

    பின்னர், அதிமுகவை நிராகரிப்போம் எனும் தீர்மானத்தை குரல் வாக்கெடுப்பு மூலம் ஸ்டாலின் நிறைவேற்றினார். மேலும், வீடு வீடாக சென்று அதிமுக அரசுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை விநியோகித்தார்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: