ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தேனி நியூட்ரினோ திட்டத்தைக் கைவிடுக! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

தேனி நியூட்ரினோ திட்டத்தைக் கைவிடுக! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

பொட்டிபுரம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நியூட்ரினோ மையத்தால், மீள முடியாத அளவிற்கு அங்குள்ள சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தேனியில் நியூட்ரினோ மையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுமாறு, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், பொட்டிபுரம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நியூட்ரினோ மையத்தால், மீள முடியாத அளவிற்கு அங்குள்ள சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

  மதிகெட்டான் - பெரியார் புலிகள் வலசை இணைப்புப் பாதையில், நியூட்ரினோ குகை அமைய உள்ளதால்,புலிகளின் மரபணு ஓட்டப் பராமரிப்பு அழிக்கப்படும் என கூறியுள்ளார். திட்டத்தை செயல்படுத்த அமைக்கப்படும் குகையால் மலைக்கு கடும் சேதம் ஏற்படும் என, சுற்றுச்சூழல் பாதிப்பை ஆய்வு செய்யும் மாநில குழுவின் ஆய்வின் முடிவுகளை முதல்வர் இணைத்துள்ளார்.

  குறிப்பிட்ட மலை வழியாக பாயும் கோத்தகுடி நதியை நீராதாரமாக நம்பியுள்ள மக்களும் இத்திட்டத்தால் அவதிக்கு ஆளாக வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.  இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை தமிழகக் குழு நேரில் சந்தித்து ஏற்கனவே வலியுறுத்தியதையும் நினைவு கூர்ந்துள்ளார். இதை கருத்தில் கொண்டு நியூட்ரினோ திட்டத்தை கைவிடுமாறு, அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்த வேண்டும் என, முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: MK Stalin, PM Modi, Theni