Home /News /tamil-nadu /

உயிரின் கரு! உணர்வின் திரு! வாழ்வின் உரு! வளர்ச்சியின் எரு! மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து..!

உயிரின் கரு! உணர்வின் திரு! வாழ்வின் உரு! வளர்ச்சியின் எரு! மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து..!

தாயாளும்மாள் - மு.க.ஸ்டாலின்

தாயாளும்மாள் - மு.க.ஸ்டாலின்

Mother's Day 2020 | MK Stalin | என் அன்னைக்கும் அவர் போன்ற அன்னையர் குலத்துக்கும் வாழ்த்துகள்! - மு.க.ஸ்டாலின்

அன்னையர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தாயார் தயாளு அம்மாவிடம் வாழ்த்து பெற்றார்.

உலகில் மிகப்பெரிய உறவு என்றால் அது அம்மாதான். எந்தவித சுயநலமும் இன்றி தன் பிள்ளைகளுக்காகவே வாழுகின்ற ஒரே ஜீவன் அம்மா மட்டுமே! அத்தகைய அம்மாவின் மேன்மையை போற்றும் வகையில் உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதுதான் அன்னையர் தினம்.

கொரோனா அச்சம் காரணமாக, கோலாகலமான கொண்டாட்டங்கள் இல்லாவிட்டாலும் அன்னையர் தினத்தை உலகமெங்கிலும் கொண்டாடி வருகின்றனர். அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் தங்களது அன்னையர் தின வாழ்த்தை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் தனது தாயார் தயாளு அம்மாவிடம் வாழ்த்து பெற்றார். இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,
உயிரின் கரு! உணர்வின் திரு! வாழ்வின் உரு! வளர்ச்சியின் எரு!- எல்லாம் சேர்ந்தவள் அன்னை! அவர்களால்தான் உலகம் இயங்குகிறது.

இயற்கையும் அன்னையும் இல்லாமல் எவரும் வளர்ந்திருக்கவும் வாழ்ந்திருக்கவும் முடியாது! என் அன்னைக்கும் அவர் போன்ற அன்னையர் குலத்துக்கும் வாழ்த்துகள்! உங்கள் அன்பும் கருணையுமே உலகம் என்றும் வேண்டி நிற்பது! என பதிவிட்டிருக்கிறார்.













சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Vijay R
First published:

Tags: MK Stalin, Mothers day

அடுத்த செய்தி