• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 'நவீன தீண்டாமையை அறிமுகம் செய்துள்ளார் மு.க.ஸ்டாலின்' : எல். முருகன் ஆவேசம்

'நவீன தீண்டாமையை அறிமுகம் செய்துள்ளார் மு.க.ஸ்டாலின்' : எல். முருகன் ஆவேசம்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் வாட் வரியை ஏன் இன்னும் குறைக்கவில்லை? என்று எல். முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Share this:
    தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிப்பதை தவிர்த்ததன் மூலம், தமிழ்நாட்டில் நவீன தீண்டாமையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ளார் என்று, மத்திய அமைச்சர் எல். முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

    தீபாவளியையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்காதது விவாதங்களை கிளப்பி வருகிறது. இதுபற்றி ஸ்டாலின் மீது பாஜக தலைவர்கள் கடும் விமர்சனங்களை வைத்தாலும், ஸ்டாலின் தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை.

    இந்நிலையில் மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சரும், பாஜக முன்னாள் தமிழக தலைவருமான எல். முருகன் ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-

    டீசல், பெட்ரோல் விலையை குறைப்பு செய்து பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி பரிசை அளித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களிலும் வாட் வரி குறைக்கப்பட்டு மேலும் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் வாட் வரியை ஏன் இன்னும் குறைக்கவில்லை?

    தீபாவளியையொட்டி உலக நாடுகளின் தலைவர்களே வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இது கண்டிக்கத்தக்கது. இதனை ஓர வஞ்சனை என்று கிராமப்புறங்களில் சொல்வார்கள். இவ்வாறு செய்ததன் மூலம் நவீன தீண்டாமையை தமிழ்நாட்டில் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதற்காக அவர் பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இந்துக்கள் அல்லாதோரின் பண்டிகைகளுக்கு ஸ்டாலின் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Mushtak
    First published: