ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஓபிசி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டிலேயே அமல்படுத்தவேண்டும் - பிரதமருக்கு மு.க ஸ்டாலின் கடிதம்

ஓபிசி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டிலேயே அமல்படுத்தவேண்டும் - பிரதமருக்கு மு.க ஸ்டாலின் கடிதம்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.

ஆயிரக்கணக்கான மாணவர்களின் மருத்துவ கல்வி கேள்விக்குள்ளாகும். 50% இட ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் - தீர்வு காண வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்களால் வழங்கப்பட்டுள்ள மருத்துவக் கல்வி இடங்களில், நடப்பு கல்வியாண்டிலேயே  இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த உடனடியாகத் தலையிடக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

பிரதமருக்கு மு.க ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே நடை முறைப்படுத்தப் படாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும்.

அரசியல் மற்றும் கருத்தியல் வேறுபாடுகளைத் தாண்டி நாம் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் உரிமைகளுக்காக ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். ஆயிரக்கணக்கான மாணவர்களின் மருத்துவ கல்வி கேள்விக்குள்ளாகும். 50% இட ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் - தீர்வு காண வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: MKStalin, OBC Reservation, PM Narendra Modi