“பேராசிரியர் - பொதுச்செயலாளர் மட்டுமல்ல; எனது பெரியப்பா!“ - ஸ்டாலின் உருக்கமான வாழ்த்து

“பேராசிரியர் - பொதுச்செயலாளர் மட்டுமல்ல; எனது பெரியப்பா!“ - ஸ்டாலின் உருக்கமான வாழ்த்து
க.அன்பழகன் - மு.க.ஸ்டாலின்
  • News18 Tamil
  • Last Updated: December 19, 2019, 12:12 PM IST
  • Share this:
திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் 98வது பிறந்த நாளை ஒட்டி அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக மூத்த தலைவர் க.அன்பழகனின் 98வது பிறந்த நாளான இன்று ஏராளமானோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

க.அன்பழகன் உடல் நலிவுற்று இல்லத்தில் ஓய்வு பெற்று வருகிறாா். இந்நிலையில் அவரது உடல்நலனைக் கருத்தில் கொண்டு அவரது 98-வது பிறந்த நாளில் கட்சியினா் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவிப்பதை முழுமையாகத் தவிா்த்திட வேண்டும் என்று ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.


திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பேராசிரியர் க.அன்பழகனுக்கு வாழத்து தெரிவித்துள்ளார். அதில், “பேராசிரியர் - பொதுச்செயலாளர் மட்டுமல்ல; எனது பெரியப்பா! நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் முதுபெரும் தந்தை, இனமானம் - தன்மானம் ஊட்டிய தாய்; இயக்கம் நடத்த வழிகாட்டிய அண்ணன்! 98-வது பிறந்தநாளில் பேராசிரியர் பெருந்தகையை, வணங்கி, வாழ்த்தி மகிழ்கிறேன்!“ என்று வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.கவிஞர் வைரமுத்து, “தொண்ணூற்று எட்டைத் தொட்டதல்ல வியப்பு; ஒரே கொள்கையில் ஊன்றி நிற்பதே சிறப்பு.பேராசிரியப் பேராசானே!கலைஞர் உள்ளம் வாழ்த்தும். கவிஞர்கள் வணங்குகிறோம்“ என்றுள்ளார்.திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “நூற்றாண்டு கண்ட திராவிட இயக்க தளபதிகளில் ஒருவரான பொதுச்செயலாளர் பேராசிரியர் தாத்தா அவர்களுக்கு இன்று 98-வது பிறந்தநாள். இந்த நெடிய பயணத்தை, என்னைப்போன்ற மாணவர்கள் கற்கும்வகையிலான ஆகச்சிறந்த பாடத்திட்டமாகவே வடிவமைத்துக்கொண்ட பேராசிரியர் தாத்தாவை வணங்குகிறேன்“ என்றுள்ளார்.
First published: December 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்