முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு

சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

Mk Stalin : போரூரில் உள்ள மதுரவாயல் புறவழிச் சாலையில் மேற்கொள்ளப்படும் வெள்ளத் தடுப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலில் ஆய்வுசெய்கிறார்.

  • 1-MIN READ
  • Last Updated :

சென்னையில் செம்மஞ்சேரி, போரூர் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வுசெய்கிறார்.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துவருகிறது. சென்னையில் நேற்றிரவும் லேசான மழை பெய்தது. வடகிழக்குப் பருவமழையின்போது, சென்னையில் வெள்ளம் தேங்காத வகையில், தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வுசெய்கிறார். போரூரில் உள்ள மதுரவாயல் புறவழிச் சாலையில் மேற்கொள்ளப்படும் பணிகளை முதலில் அவர் ஆய்வுசெய்கிறார்.

Must Read : பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் - பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு

இதனைத் தொடர்ந்து, தந்திக்கல் கால்வாய், வரதராஜபுரம், நூக்கம்பாளையம் பாலம், அரசங்களனி, மதுரப்பாக்கம் ஓடை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை பார்வையிடுகிறார்.

First published:

Tags: Chennai flood, DMK, MK Stalin, Rain