• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • MK Stalin : 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு விநியோகத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

MK Stalin : 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு விநியோகத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பத்தாருக்கு, 13 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளாகிய நாளை சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

  • Share this:
    கொரோனா நோய் பரவலைத் தடுக்கும் நோக்கில் தமிழக அரசு முழு ஊரடங்கை மேலும் ஒரு வார காலம் நீட்டித்துள்ளது. இதனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம், ஜூன் மாதம் முதல் வழங்கிட, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என்று தெரிவித்திருந்தார்.

    அதபடி, 2.11 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, கோதுமை மாவு, உப்பு, ரவை, சர்க்கரை, உளுந்தம் பருப்பு, புளி, கடலைப் பருப்பு, டீத்தூள், கடுகு, சீரகம், மஞ்சள்தூள், மிளகாய்தூள், குளியல் சோப்பு, துணி துவைக்கும் சோப்பு மற்றும் துணிப்பை ஆகிய 13 பொருட்கள் இந்த தொகுப்பில் வழங்கப்பட இருக்கின்றன.

    இந்தப் பொருட்கள் அனைத்து நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் குடோனுக்கு தற்போது கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து பொருட்களும் ஒவ்வொரு துணிப்பையில் போடப்பட்டு, அந்தந்த ரேஷன் கடைகளுக்கு எண்ணிக்கைக்கு ஏற்ப அனுப்பி வைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான நாளை, இந்த மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். அத்துடன், கொரோனா நிவாரணத்தின் இரண்டாம் தவணையாக, 2,000 ரூபாய் வழங்கும் திட்டமும், நாளை தொடங்கி வைக்கப்படுகிறது.

    இந்நிலையில், 5ஆம் தேதி முதல் ரேஷன் கடைகள் வாயிலாக, கார்டுதாரர்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது. இதற்கான தேதி, நேரத்திற்கு பயனாளர்கள் வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய டோக்கன்கள், கார்டுதாரர்களின் வீடுகளில், நேற்று முதல் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், நேற்று மு.க.ஸ்டாலின் பேசிய வீடியோ ஒன்று வெளியானது. அதில், “ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு கொரோனா பரவும் சங்கிலியை உடைத்தாலே கொரோனா பரவலைத் தடுத்துவிட முடியும். கடந்த 24 முதல் ஏழு நாட்களுக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஏழு நாட்களுக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 24ஆம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னையில் 7 ஆயிரம் வரை எட்டிய பாதிப்பு, இப்போது 2 ஆயிரமாக குறைந்து விட்டது. இன்னும் ஒருசில நாட்களில் முழுமையாகக் குறைந்துவிடும். கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் கடந்த வாரத்தில் அதிகமாகியது. அதுவும் கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வருகிறது.

    எனவே, கொரோனாவை முழுமையாகக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கைத் தவிர வேறு வழியில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும். முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து பல்வேறு ஏற்பாடுகளை அரசு செய்து தந்துள்ளது. மக்களை நோக்கி காய்கறிகள், மளிகைப் பொருட்கள் வந்து சேர ஏற்பாடுகள் செய்துள்ளோம். ரேசன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்குத் தேவையான 13 பொருட்கள் அடங்கிய தொகுப்பு தரப்பட உள்ளது. இதனை பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்களில் குறிப்பிட்ட பிரிவினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது உண்மைதான். அதனாலதான், கொரோனா நிவாரண நிதியாக முதல் கட்டமா 2000 ரூபாயைக் கொடுத்துள்ளோம். விரைவில் அடுத்த 2000 ரூபாயைக் கொடுக்கப் போகிறோம். இதனை பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி கூட பாராட்டியுள்ளார்.

    Must Read : இந்தியாவில் பரவும் உருமாறிய கொரோனாவின் ஒரேயொரு வகைதான் அச்சுறுத்தல்: உலகச் சுகாதார அமைப்பு தகவல்

    இருந்தாலும், ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே போகமுடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அதுவும் மக்களாகிய உங்கள் கையில்தான் இருக்கிறது. கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்றினால் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.” என்று கூறியிருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: