திருச்சி சமயபுரம் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்

திருச்சி சமயபுரம் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்

துர்கா ஸ்டாலின்

திமுக தலைவருடன் திருச்சி வந்த அவரது மனைவி துர்கா ஸ்டாலின் சமயபுரம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

 • Share this:
  தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ‘விடியலுக்கான முழக்கம்’ என்ற பெயரில் திமுகவின் சிறப்பு பொதுக்கூட்டம் சிறுகனூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதற்காக விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் வந்திருந்தார்.

  பின்னர் காரில் சமயபுரம் கோவிலுக்குச் சென்ற அவர் அங்கு சாமி தரிசனம் செய்தார். சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது. அதனால் மாலை, பூக்களைக் கொண்ட தட்டுகளுடன், துர்கா ஸ்டாலின் காணிக்கை செலுத்தினார். அதைத்தொடர்ந்து திமுக பொதுக்கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார்.

  சிறுகனூரில் நடைபெற்ற திமுக சிறப்பு பொதுக்கூட்டத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குதல், தமிழகத்தின் கடன் சுமையை குறைப்பது, நீர் மேலாண்மை, தமிழக உரிமையை நிலை நாட்டுதல், கல்வித்தரம், பெண்கள் மேம்பாடு, விவசாய துறை. சமூகநீதி என 10 அம்சங்களை உள்ளடக்கிய தமிழகத்தை மேம்படுத்த அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை மு.க.ஸ்டாலின் வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

  தி.மு.கவின் இந்த மாநாட்டில் கட்சி சாராத, பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன், பிரின்ஸ் கஜேந்திர பாபு, மருத்துவர் ரவீந்தரநாத், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் உள்ளிடோரும் கலந்துகொண்டு அவரவர் துறை சார்ந்து பேசினர்.

  மார்ச் 10-ம் தேதி திமுக வேட்பாளர் பட்டியலும், அதற்கு மறுநாள் தேர்தல் அறிக்கையும் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து 12-ம் தேதி முதல் மு.க.ஸ்டாலின் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியின் வாயிலாக தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார்.
  Published by:Sheik Hanifah
  First published: