கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினுக்காக வாக்கு சேகரித்த துர்கா ஸ்டாலின்

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினுக்காக வாக்கு சேகரித்த துர்கா ஸ்டாலின்

துர்கா ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவரது மனைவியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

 • Share this:
  தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் களைகட்டியுள்ளது. திமுக தலைவர் தமிழகம் முழுக்க சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில் அவரது மனைவியும் பிரசாரத்தில் இணைந்துள்ளார்.

  சென்னை கொளத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் மு.க.ஸ்டாலினுக்கு வாக்கு சேகரிக்கச் சென்ற துர்கா ஸ்டாலின் அப்பகுதியில் இருக்கும் ரத்ன விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் மகளிர் குழுக்கள், குடியிருப்பு நல சங்கத்தினர், பொது மக்கள் என அனைத்து தரப்பினரையும் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

  தொடர்ந்து கொளத்தூர் தொகுதி ஜிகேஎம் காலனி, சோமராமசாமி தெரு, கோபால்ரெட்டி காலனி உள்ளிட்ட பகுதிகளில் துர்கா ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட துர்கா ஸ்டாலினுக்கு அப்பகுதி மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

  முன்னதாக திருச்சி சிறுகனூரில் ‘விடியலுக்கான முழக்கம்’ என்ற பெயரில் திமுகவின் சிறப்பு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட துர்கா ஸ்டாலின் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குச் சென்ற சாமி தரிசனம் செய்து திரும்பியதும் குறிப்பிடத்தக்கது.
  Published by:Sheik Hanifah
  First published: