• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நாளை தமிழக ஆளுநராக பொறுப்பு ஏற்கிறார் ஆர்.என்.ரவி: விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

நாளை தமிழக ஆளுநராக பொறுப்பு ஏற்கிறார் ஆர்.என்.ரவி: விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

ஆர்.என்.ரவி-மு.க.ஸ்டாலின்

ஆர்.என்.ரவி-மு.க.ஸ்டாலின்

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை காலை பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெறுகிறது.

  • Share this:
    தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பேற்கவுள்ள ஆர்.என்.ரவி, சென்னை வந்தடைந்தார். அவர் சனிக்கிழமை (நாளை) பொறுப்பேற்கவுள்ளார். இரவு 8 மணி அளவில் சென்னை வந்தடைந்த அவரை விமானநிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். பின்னர், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்ற வருக்கு நுழைவாயிலில் குதிரையில் போலீசார் அணிவகுத்து வரவேற்பு அளித்தனர்.

    தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார். அதைத் தொடர்ந்து மிசோரம் ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி, தமிழ்நாடு ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். 1976ஆம் ஆண்டு கேரள பிரிவு ஐ.பி.எஸ்.அதிகாரியான இவர், மத்திய அரசு உளவுப்பிரிவின் சிறப்பு இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    நாகலாந்து மாநில ஆளுநராக 2019ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். நாகலாந்து பிரிவினைவாத குழுக்களுடன் மேற்கொள்ளப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில் ஆர்.என்.ரவி முக்கிய பங்கு வகித்தவர். இந்நலையில் தமிழகத்தின் 15ஆவது ஆளுநராக ஆர்.என்.ரவி, நாளை (சனிக்கிழமை) பொறுப்பு ஏற்க உள்ளார்.

    இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை காலையில் பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெறுகிறது. ஆர்.என்.ரவிக்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

    Must Read : ரோல்ஸ் ராய்ஸ் கார், அமெரிக்க டாலர், வைர நகைகள்... முன்னாள் அமைச்சர் வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

    இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: