ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மழை பெய்தாலும் ,பெய்யா விட்டாலும் என்னைதான் குறை சொல்வார்கள் - வேதனை தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மழை பெய்தாலும் ,பெய்யா விட்டாலும் என்னைதான் குறை சொல்வார்கள் - வேதனை தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

நேற்று திமுக தலைவராக இரண்டாம் முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலின் தனது ஏற்புரையில் வெளிப்படையாகவே தன் ஆதங்கத்தையும் மனக்குமுறலையும் வெளியிட்டார். அதில், நிதமும் கட்சிக்காரர்கள் ஏதாவது ஒரு சர்ச்சையை இழுத்துவிடுகிறீர்கள். இப்படி இருந்தால் நான் என்ன செய்வேன்? சில சமயம் தூக்கமே தொலைந்து விடுகிறது என வேதனை தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுகவின் தலைவராக 2-வது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பேசிய அவர், கட்சிக்காரர்கள் ஏற்படுத்தும் பிரச்னை குறித்து வேதனையுடன்  பேசியிருந்தார்.  ஸ்டாலினின் இந்த உருக்கமான பேச்சு இப்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

  இதுதொடர்பாக திமுக பொதுக்குழு மேடையில் அவர் பேசியபோது, அதிக மழை பெய்தாலும், மழை பெய்யாவிட்டாலும் என்னைதான் குறை சொல்வார்கள். பல்முனை தாக்குதல்களுக்கு பதில் சொல்ல கடமை பட்டவன் நான். ஒரு பக்கம் திமுக தலைவர் மறு பக்கம் தமிழ்நாடு முதல்வர். மத்தளத்திற்கு இரண்டும் பக்கம் அடி என்பது போல் உள்ளது எனது நிலைமை. இந்தச் சூழலில் உள்ள என்னை மேலும் துன்பப்படுத்தும் வகையில் மூத்தவர்கள் ,அமைச்சர்கள் நடந்து கொண்டால் நான் யாரிடம் கூறுவது என்றார்.

   மேடையில் அமர்ந்திருந்த டி.ஆர்.பாலுவுக்கு காலணி எடுத்து தந்த நபர் - வைரலாகும் வீடியோ

  உண்மையில் நாள்தோறும் நம்மவர்கள் யாரும் பிரச்சனையை உருவாக்கியிருக்க கூடாது என்று தான் கண்விழிக்கிறேன். இது சில நேரங்களில் என்னை தூங்க விடாமல் கூட ஆக்குகிறது. என் உடம்பை பார்த்தாலே உங்களுக்கு தெரியும் என வேதனையாக பேசினார்.

  மேலும், உங்களின் ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கப்படுகிறது. மிக மிக எச்சரிக்கையாக பேசுங்கள். நீங்கள் சொன்னத்தை வெட்டி, ஓட்டி பரப்புவார்கள். இது தான் எதிரிகளின் நோக்கம். இது முக்கியமான கால கட்டம். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டுள்ளது. யாரும் மெத்தனமாக இருக்க கூடாது. எனவே நாம் பயன்படுத்த வேண்டிய சொற்கள் மிக மிக முக்கியமானவை, ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்; இதனால் அடுத்தவர்களிடம் பேசும் போது மிக மிக எச்சரிகையாக பேசுங்கள் என கேட்டுக்கொண்டார்.

  ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஒருபக்கம்  அவரின் உருக்கமான பேச்சால் பலரும் அவருக்கு ஆதரவாக பலரும் பதிவிட்டு வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் அவரால் ஆளுமையான தலைவராக இருக்கமுடியவில்லை என்றும் விமர்ச்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.

  Published by:Lakshmanan G
  First published:

  Tags: MK Stalin, TN Govt