சட்டசபையில் திமுக வெளிநடப்புக்கு காரணமான கிரண் பேடி!

news18
Updated: July 1, 2019, 5:42 PM IST
சட்டசபையில் திமுக வெளிநடப்புக்கு காரணமான கிரண் பேடி!
ஸ்டாலின் மற்றும் கிரன் பேடி
news18
Updated: July 1, 2019, 5:42 PM IST
சட்டசபையில் குடிநீர் பிரச்னை மீதான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மான விவாதத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், கிரண் பேடியின் சில கருத்துக்களை குறிப்பிட, அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால திமுக வெளிநடப்பு செய்தது.

சட்டசபை கூட்டத்தொடரின் இன்றைய அலுவல் காலை தொடங்கிய நிலையில், திமுக தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான மு.க ஸ்டாலின், குடிநீர் பிரச்னை தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.

தீர்மானத்தில் ஸ்டாலின் பேசுகையில், “சென்னை உட்பட இந்தியாவின் 27 மாநகரங்களில் 2020-ம் ஆண்டில் தண்ணீர் இல்லாத நாள் சந்திக்க வேண்டிவரும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. சென்னைக்கு நீர் வரும் ஏரிகளில் தண்ணீர் இல்லை. இது தொடர்பாக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் பேசினேன்.

2020-ம் தண்ணீர் தட்டுப்பாடு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் 2019-ல் இருந்தே பல குடியிருப்புகளில் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது
ஒருநாள் சிறப்பு நிகழ்வாக ஒதுக்கி அனைத்து உறுப்பினர்களின் கருத்தை கேட்க வேண்டும்.

ஆன்லைன் புக்கிங் செய்தால் 30 நாட்களுக்கு தண்ணீர் கொடுக்க முடியாத அவல நிலையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உள்ளது. தாய்மார்கள் காலிக் குடங்களுடன் தண்ணீருக்காக அலையும் அவல நிலையும் நிலவி வருகிறது. தமிழ்நாடு குடிநீர் பஞ்சத்தில் தத்தளித்து வருகிறது. தாய்மார்கள் குடங்களுடன் அலைந்துகொண்டு இருக்கிறார்கள்.

குடிமாராமத்து பணி தோல்வியடைந்து இன்று தமிழகம் தண்ணீர் பஞ்சத்தில் உள்ளது. ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதை வரவேற்கிறேன் ஆனால் தற்காலிக திட்டம் தான்.” என்று பேசினார்.

பேச்சின் போது ”தமிழகத்தில் ஊழல் நடப்பதாகவும், மோசமான அரசு நடப்பதாகவும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ட்வீட் பதிவிட்டதை சுட்டிக்காட்டி, தமிழகத்தை கிரண் பேடி அவமானப்படுத்துவதாக ஸ்டாலின் பேசினார்.

குடிநீர் பிரச்னை குறித்த கிரண்பேடியின் கருத்து மக்களை கேவலப்படுத்தும் வகையில் உள்ளது என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.இதற்கு குறுக்கிட்ட அமைச்சர் சி.வி சண்முகம், “புதுவை துணை நிலை ஆளுநர் எங்களைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? அவர் ஒழுங்காக நிர்வாகத்தை நடத்துகிறாரா? அவருக்கு உரிமை இருக்கிறதா? என்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் இருக்கிறது என ஆவேசமாக அமைச்சர் பேசினார்

நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு குறித்தும், ஆளுனர் குறித்தும் சட்டமன்றத்தில் பேசக் கூடாது என சட்ட மன்றத்தில் பேசக்கூடாது என விதி இருப்பதால் அனைத்தும் அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் தெரிவித்தார்.

இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தார். கிரண் பேடியின் பேச்சை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

 

Also See...

First published: July 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...