கொடைக்கானல் மலை கிராமங்களை குடும்பத்துடன் சென்று ரசித்த மு.க.ஸ்டாலின்!

கொடைக்கானல் மலை கிராமங்களை குடும்பத்துடன் சென்று ரசித்த மு.க.ஸ்டாலின்!

கொடைக்கானலில் மு.க.ஸ்டாலின்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் சென்று கண்டு ரசித்தார்.

  • Share this:
    கொடைக்கானல் மேல்மலை கிராமங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் சென்று கண்டு ரசித்தார்.

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஓய்வுக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கடந்த வெள்ளி்கிழமை வருகை தந்தார். அதனை தொடர்ந்து பாம்பார்புரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி ஓய்வு எடுத்து வந்தார்.

    கடந்த இரண்டு தினங்களாக தனியார் தங்கும் விடுதியை விட்டு வெளியில் வராமல் இருந்து வந்த மு.க.ஸ்டாலின், தனியார் தங்கும் விடுதியிலேயே நடைபயிற்சி மேற்கொண்டதுடன், கேரம் போர்டு உள்ளிட்ட விளையாட்டுகளையும் விளையாடி வந்தார்.

    இந்நிலையில் இன்று கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை, கூக்கால் உள்ளிட்ட கிராமங்களுக்கு தனது குடும்பத்தினருடன் சென்று மன்னவனூரில் உள்ள ஆட்டுப்பண்ணை, முயல் பண்ணை, சூழல் சுற்றுலா மற்றும் கூக்கால் ஏரியை கண்டு ரசித்தார்.

    திமுக தலைவர் ஸ்டாலினை பார்த்த சுற்றுலா பயணிகள் மற்றும் கிராம மக்கள் ஆர்வத்துடன் வந்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து சென்றனர்.

    செய்தியாள‌ர் - ஜாபர்சாதிக்
    Published by:Esakki Raja
    First published: