MK Stalin: ரஜினியின் பஞ்ச் வசனம் பேசி முதல்வரை விமர்சித்த மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் | ரஜினிகாந்த்

ரஜினிகாந்தின் அருணாச்சலம் பட பஞ்ச் வசனத்தை பேசி தமிழக முதல்வரை மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

  • Share this:
    தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்களின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. விழுப்புரம் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அத்தொகுதி மக்கள் மனுக்கள் மூலம் குறைகளை தெரிவித்தனர்.

    அதற்கு பதிலளித்து பேசிய மு.க.ஸ்டாலின், “நீங்கள் கொடுத்துள்ள புகார் மனுக்கள் மீது ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களில் தீர்வு காணப்படும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் புகார் பதிவு அட்டை வைத்திருப்பவர்கள் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கோட்டைக்குள் வந்து முதலமைச்சர் அறைக்கு வந்து நேரில் என்னை சந்திக்கலாம். என்னிடம் கேள்வி எழுப்பலாம்.

    திமுக ஐந்து முறை தமிழகத்தில் ஆளுகின்ற பொழுது மக்களுக்கான ஆட்சியாக அமைந்தது ஆனால் தற்போது உள்ள ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக செயல்பட்டு வருகிறது.

    உழைப்பு என்பது ஸ்டாலினுக்கு இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறுவது வேடிக்கையாக உள்ளது. ஊர்ந்து செல்வது தான் உங்களது உழைப்பு அப்படி ஊர்ந்து செல்ல வேண்டியது எனக்கு இல்லை. ஊர்ந்து போய் பதவியை பெறுவதும் அதன்பிறகு காலை வாரிவிட்டு பதவி சுகத்தை அனுபவிப்பது எனக்கு பழக்கம் இல்லை. கலைஞர் அவர்கள் குறைக்கவும் போராடவும் அஞ்சாமல் மக்களுக்காக சிறைக்குச் செல்லவும் கற்றுக் கொடுத்தவர்.

    விவசாய குடும்பம் குடும்பம் என கூறிக்கொள்ளும் முதலமைச்சர் விவசாயிகளின் பச்சை துண்டை போட்டுக் கொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்து வருகிறார். தேர்தல் வரும் நேரம் என்பதால் விவசாய கடன் ரத்து என கூறி வருகிறார். தர்மபுரி மாவட்டத்தில் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடத்தி அலியாளம் அணைக்கட்டி தூள் செட்டி வரை வாய்க்கால் அமைத்து நீர் கொண்டு வரக்கூடிய திட்டம் நான்கு வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டினேன். அந்தத் திட்டத்தை இன்று முதல்வர் காணொளி காட்சி தொடங்கப்போவதாக செய்தி வந்திருக்கிறது. இப்படி நான் சொன்னதைத்தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்கிறார்.

    ஒரு படத்தில் சூப்பர் ரஜினிகாந்த் சொல்வார் ‘ஆண்டவன் சொல்றான் இந்த அருணாச்சலம் செய்றான்’ என்பது மாதிரி இப்போது இந்த ஸ்டாலின் சொல்றார். பழனிசாமி செய்கிறார். இதுதான் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது.” என்றார்.

    மேலும் விவசாய கடன் தள்ளுபடி, ஆன்லைன் சூதாட்டம் ரத்து, இபாஸ் ரத்து, ஜாக்டோ ஜியோ போராட்ட வழக்குகள் திரும்பப்பெறப்பட்டது ஆகிய பல்வேறு விவகாரங்களில் மு.க.ஸ்டாலின் அறிவித்ததும் முதலமைச்சர் செயல்படுத்தியதும் படக்காட்சிகளாக மக்கள் மத்தியில் ஒளிப்பரப்பப்பட்டது.

    இறுதியாக கொரோனா காலத்தில் அனைத்து டெண்டரிகளிலும் ஊழல் செய்த கொரோனாவை விட கொடிய அதிமுக அரசை மக்கள் தண்டிக்க வேண்டும். கொரோனாவை விட கொடிய ஆட்சி எடப்பாடி பழணிசாமி ஆட்சி எனக் கூறி மு.க.ஸ்டாலின் தனது உரையை நிறைவு செய்தார்.
    Published by:Sheik Hanifah
    First published: