Home /News /tamil-nadu /

பேருந்தில் இருந்து பெண் இறக்கிவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்தது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பேருந்தில் இருந்து பெண் இறக்கிவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்தது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பாதிக்கப்பட்ட பெண் பயணி

பாதிக்கப்பட்ட பெண் பயணி

அரசு பேருந்தில் இருந்து மூதாட்டி இறக்கிவிடப்பட்ட சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தமிழக போக்குவரத்து துறையின் குமரி மாவட்ட துணை இயக்குனர் (இயக்கம் & ஆய்வு) ஜெரோலின் மூதாட்டியை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...
    கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பேருந்தில் இருந்து  பெண் பயணி நடத்துனரால் இறக்கிவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எல்லோரும் சமம் என்ற பரந்த உள்ளத்துடன் அனைவரது எண்ணமும் செயலும் அமைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கன்னியாகுமரி வாணியக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமேரி. மீன் விற்பனை செய்துவரும் இவர்  குளச்சல் பேருந்துநிலையத்தில் இருந்து வாணியக்குடி செல்லும் அரசு பேருந்தில் ஏறியபோது, நாற்றம் அடிப்பதாக கூறி அவரை பேருந்தில் இருந்து நடத்துநர் இறக்கிவிட்டுள்ளார்.

    இதனால் பாதிக்கப்பட்ட மூதாட்டி பேருந்து நிலையத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார். இது தொடர்பாக வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து அரசின் மேல்மட்டத்திற்கு தகவல் சென்றது.

    இதையடுத்து, மூதாட்டியை  பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட  நடத்துநர் மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக போக்குவரத்து துறையின் குமரி மாவட்ட துணை இயக்குனர் (இயக்கம் & ஆய்வு) ஜெரோலின் மூதாட்டியை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: சாதி பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான மயானங்களை அமைக்க வேண்டும்: அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு


    இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,  குமரி மாவட்டத்தில், மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரைப் பேருந்து நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வானது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது.



    மகளிர் மேம்பாட்டுக்காகக் கட்டணமில்லா உரிமைச்சீட்டை வழங்கி, அதை நடத்துநர்கள் திறம்படச் செயல்படுத்தி வரும் இக்காலத்தில், ஒரு நடத்துநரின் இச்செயல் கண்டிக்கத்தக்கதாக உள்ளது. எல்லோரும் சமம் என்ற பரந்த உள்ளத்துடன் நம் அனைவரது எண்ணமும் செயலும் அமைய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

    மேலும் படிங்க: ரூ.1,000 கோடி வருமானம் மறைப்பு... ரூ.250 கோடிக்கும் மேல் முறைகேடு... சிக்கிய சரவணா ஸ்டோர்!

    Published by:Murugesh M
    First published:

    Tags: Kanniyakumari, MK Stalin

    அடுத்த செய்தி