• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ‘வரும்முன் காப்போம்’ மருத்துவத் திட்டத்தை இன்று வாழப்பாடியில் தொடங்கிவைக்கிறார் முதலமைச்சர்

‘வரும்முன் காப்போம்’ மருத்துவத் திட்டத்தை இன்று வாழப்பாடியில் தொடங்கிவைக்கிறார் முதலமைச்சர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தர்மபுரிக்கு நாளை செல்லும் முதலமைச்சர், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் புதிய கட்டிடங்களை திறந்துவைக்கிறார்.

  • Share this:
    சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் என இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார். வாழப்பாடியில் இன்று காலை நடைபெறும் நிகழ்ச்சியில் “வரும்முன் காப்போம்” என்ற மருத்துவத் திட்டத்தைத் தொடங்கிவைக்கிறார்.

    வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் நேற்று ஆய்வு நடத்தினார். இதனைத் தொடர்ந்து, சேலம், தர்மபுரி மாவட்டங்களுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார். சென்னையிலிருந்து இன்று காலை விமானம் மூலம் புறப்படும் முதலமைச்சர், வாழப்பாடிக்கு சென்று, வரும்முன் காப்போம் திட்டத்தை தொடங்கிவைக்கிறார்.

    இந்தத் திட்டத்தின்கீழ், தமிழகம் முழுவதும் ஆண்டுக்கு 1,240 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்த முகாம்களில் 16 பிரிவுகளைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் இடம்பெறுவார்கள் என்றும், மக்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்குவார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.

    இந்நிலையில், சேலம் மாவட்டம், வாழப்பாடியில் புதிய மருத்துவத் திட்டத்தை தொடங்கிவைத்த பிறகு, ஆத்தூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை திறந்துவைத்து, புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். நவீன தனியார் ஜவ்வரிசி பதப்படுத்தும் ஆலையைத் தொடங்கிவைத்து, ஜவ்வரிசி விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார்.

    Must Read : 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் நவம்பர் 1 முதல் இயங்கும் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

    மாலையில், கருப்பூரில் உள்ள சிட்கோ வளாகத்தில் தொழில் துறையினர் மற்றும் விசைத்தறி சங்கத்தினருடன் கலந்துரையாடுவார் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தர்மபுரிக்கு நாளை செல்லும் முதலமைச்சர், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் புதிய கட்டிடங்களை திறந்துவைக்கிறார். மேலும், ஒகேனக்கல் குடிநீர் விநியோகத் திட்டத்தையும் பார்வையிடுகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: