ஊரடங்கு உத்தரவு வரும் 14ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் மேலும் அதை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்தும் உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு வகையில் நடவடிக்கை மேற்கெண்டு வருகின்றது. அதன்படி, ஏற்கெனவே இருந்த ஊரடங்கு உத்தரவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் கடுமையாக்கி, மே மாதம் 24ஆம் தேதியில் இருந்து தளர்வுகள் எதுவும் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த முழு ஊரடங்கு உத்தரவு 2 வாரம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, 36 ஆயிரம் என்ற தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து 19 ஆயிரம் என்ற எண்ணிக்கையை அடைந்தது. அதைத் தொடர்ந்து ஜூன் 7ஆம் தேதியில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் ஒரேநாளில் புதிததாக 17,321 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும் 31,253 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 405 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் தொற்று வெகுவாக குறைந்து வந்தாலும், தினசரி உயிரிழப்பு என்பது குறையாமல் இருந்து வருகிறது. கொரோனாவால் ஒரே நாளில் 405 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 28,170 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது குறித்தும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இந்த கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், வருவாய் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், காவல்துறை டி.ஜி.பி. திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
Must Read : கொரோனாவால் நுரையீரல் பாதித்த மருத்துவருக்கு உதவ 20 லட்சம் ரூபாய் திரட்டிய கிராம மக்கள்
இந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பின்னர், மாவட்ட ஆட்சியர்களுடனும், மருத்துவ நிபுணர் குழுவுடனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது குறித்தும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது. இந்த கூட்டத்திற்குப் பின்னர் அங்கு தளர்வுகள் அறிவிக்கப்படுமா? என்பது தெரியவரும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus, Covid-19, Lockdown, MK Stalin