MK Stalin swearing in ceremony Live Update: முதலமைச்சராக பதவி ஏற்றார் மு.க ஸ்டாலின்

Today News Tamil - Live Updates: கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

  • News18 Tamil
  • | May 07, 2021, 14:59 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 2 MONTHS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    17:02 (IST)

    தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம்....

    14:55 (IST)

    பிரதமருக்கு நன்றி தெரிவித்தார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 

    14:47 (IST)

    புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்ற பின்னர் சட்டப்பேரவைக்கு வந்த முதலமைச்சர் ரங்கசாமி நிலுவையில் உள்ள 2 மாதத்திற்கான அரிசி வழங்குவது, 10 ஆயிரம்  நபர்களுக்கு புதியதாக முதியோர், விதவை பென்ஷன் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான சென்டாக் பணம் வழங்கும் 3 கோப்புகளில்  கையெழுத்திட்டார்.

    14:35 (IST)

    முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் ட்விட்டரில் பதிவு 

    14:20 (IST)

    தமிழக முதலமைச்சராக பதவி ஏற்ற மு.க ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து 

    13:38 (IST)

    தமிழக முதலமைச்சரின் செயலாளர்களாக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம். உதயச் சந்திரன், உமாநாத், அனு ஜார்ஜ், எம்.எஸ் சண்முகம் ஆகிய 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்

    13:19 (IST)

    புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் என்.ரங்கசாமி - துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

    13:17 (IST)

    புதுச்சேரி 15வது சட்டபேரவையின் 20வது முதல்வராக ரங்கசாமி பதவி ஏற்கிறார். 2001,2006,2011 ஆகிய ஆண்டுகளை தொடர்ந்து 4வது முறையாக ரங்கசாமி முதல்வராகிறார்.

    13:03 (IST)

    முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ,முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து