வேலூர் தேர்தலில் திமுக வெற்றி பெற ஸ்டாலின் செய்த வியூகம் இதுதான்?

இத்தேர்தலில் திருப்புமுனையாக அமைந்தது சிறுபான்மை சமூக மக்களின் வாக்குகள். அதனை மையப்படுத்தியும் திமுக பிரசாரம் மேற்கொண்டது. குறிப்பாக, முத்தலாக் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியது அக்கட்சிக்கு ஆதரவாக அமைந்தது.

வேலூர் தேர்தலில் திமுக வெற்றி பெற ஸ்டாலின் செய்த வியூகம் இதுதான்?
மு.க.ஸ்டாலின்
  • Share this:
வேலூர் மக்களவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், திமுக, அதிமுக, என 2 கட்சிகளும் களத்தில் விறுவிறுப்பாக பரப்புரை பணிகளை மேற்கொண்டன.

குறிப்பாக திமுகவின் கதிர் ஆனந்தை ஆதரித்து, கடந்த மாதம் 27-ம் தேதி பிரசாரத்தை தொடங்கிய அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், கிராமங்களுக்கு சென்று திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

விரைவில் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் வரும் என்ற முழக்கத்தை முன்வைத்து பரப்புரை மேற்கொண்ட அவர், வெற்றிபெற்ற திமுக எம்.பி.க்களின் நாடாளுமன்ற உரைகளை எடுத்துரைத்து  மக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.


குறிப்பாக, அஞ்சல் துறை தேர்வு ரத்து, மும்மொழிக் கொள்கை எதிர்ப்பில், திமுக எம்.பிக்களின் பங்கை நினைவுகூர்ந்து அவரது பிரசார யுக்தியை வடிவமைத்திருந்தார் மு.க.ஸ்டாலின்.

ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தரும் வகையில், தனது பிரசார வியூகத்தை அமைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்றார்.

இருவரும் ஒரே நாளில் பரப்புரை மேற்கொண்டது, தேர்தல் களத்தை மேலும் விறுவிறுப்பாக மாற்றியது.இதேபோல், தேர்தல் பிரசாரத்தில், திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து வாக்கு சேகரித்தது, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு பலமாக அமைந்தது. இறுதிகட்டப் பரப்புரையில் திமுக கூட்டணியின் அனைத்துத் தலைவர்களும், ஒன்றாக கூடி பரப்புரை மேற்கொண்டனர்.

அதிமுக கூட்டணித் தலைவர்கள் ஒன்றாக இணைந்து பரப்புரை செய்யாதது விமர்சனங்களை ஏற்படுத்தியது. பிரேமலதா விஜயகாந்த், ஜெயக்குமார் என அனைத்துத் தலைவர்களும் தனித்தனியாக பரப்புரை மேற்கொண்டனர்.

தேர்தல் பரப்புரையின் பேசிய அதிமுக எம்.பி. வைத்திலிங்கம், ஆட்சி என்பது துண்டு போன்றது எனவும், கட்சி என்பது வேட்டி போல எனவும் பேசினார். இந்தப் பேச்சும், தேர்தல் பரப்புரையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இத்தேர்தலில் திருப்புமுனையாக அமைந்தது சிறுபான்மை சமூக மக்களின் வாக்குகள். அதனை மையப்படுத்தியும் திமுக பிரசாரம் மேற்கொண்டது. குறிப்பாக, முத்தலாக் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியது அக்கட்சிக்கு ஆதரவாக அமைந்தது.

Also Watch: ஆரஞ்சு நிற பட்டு ஆடையில் காட்சியளிக்கும் அத்திவரதர்

First published: August 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading