ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Headlines Today : டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு - தலைப்புச் செய்திகள் (மே 31-2022)

Headlines Today : டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு - தலைப்புச் செய்திகள் (மே 31-2022)

 மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

Headlines Today : டெல்டா மாவட்டங்களில் பாசன வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

டெல்டா மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் பாசன வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளை இன்று ஆய்வுசெய்கிறார்.

கோவையில் ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

எடப்பாடியில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாகக் கூறி, உறவினர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனைக்கு சீல்வைக்கப்பட்டது.

மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், அதிமுக வேட்பாளர்கள் சிவி. சண்முகம், ஆர். தருமர் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

விசா முறைகேடு வழக்கில், அமலாக்கத் துறை கைதுசெய்வதிலிருந்து விலக்கு கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை 3-ம் தேதி வழங்குவதாக டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தனக்கு அமைச்சர் பதவி வழங்குமாறு தீர்மானம் நிறைவேற்றி கட்சித் தலைமைக்கு சங்கடம் ஏற்படுத்த வேண்டாம் என திமுக-வினருக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்.

சிவகங்கை மாவட்டம் அகரம் அகழாய்வு தளத்தில் இரு அடுக்கு கொண்ட உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத வகையில், தமிழக தேர்வர்களின் தேர்ச்சி மிகக் குறைவாக பதிவாகியுள்ளது.

கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மூன்றரை வயது மகள் எந்த சாதியையோ, மதத்தையோ சாராதவர் என்ற சான்றிதழை பெற்று இருப்பது தேசிய அளவில் கவனத்தை பெற்றுள்ளது.

கோவை தொண்டாமுத்தூரில் இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வடமாநில இளைஞர்கள் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், வேதியியல் பாடத்தில் தவறான எண்கள் குறிப்பிடப்பட்ட இரண்டு கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் பிரதமருக்கும், இந்து சமய அறநிலையத் துறைக்கும் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளனர்.

பழவேற்காடு மீனவர்களின் கோரிக்கைகளை, எல்என்டி தனியார் துறைமுக நிர்வாகம் ஏற்க மறுத்ததால் இருதரப்பினருக்கிடையேயான பேச்சு வார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்துள்ளது.

மத்தியில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடுகிறார்.

புதுச்சேரியில் 5 மதுபான தொழிற்சாலைகளும் ஒரு பீர் தொழிற்சாலையும் இயங்கி வரும் நிலையில், புதிய மதுபானத் தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை தொடர்பாக உத்தராகண்ட்டில் ஐந்து பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பண மோசடி வழக்கில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

எவரெஸ்ட் மலையின் உச்சியில் ஏறி தேசிய கீதத்தைப் பாடி இந்திய விமானப்படை கமாண்டர் விக்ராந்த் உனியல் அசத்தியுள்ளார்.

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள, நாட்டிலேயே மிகப்பெரிய தங்க சுரங்கத்திலிருந்து, தங்கத்தை பிரித்தெடுக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கிரிப்டோகரன்சி குறித்த அறிக்கையை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று மத்திய வருவாய்த் துறை செயலாளர் அஜய் சேத் தெரிவித்துள்ளார்.

Must Read : ஆம்பூர் அருகே தனியார் தொழிற்சாலை வாகனம் கவிழ்ந்து விபத்து... 40க்கும் மேற்பட்ட பெண்கள் காயம்

எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து இன்று ஒரு நாள் மட்டும் பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்யப்போவது இல்லை என தமிழகத்தில் உள்ள பெட்ரோலிய விற்பனை முகவர்கள் அறிவித்துள்ளனர்.

பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற ராட்சத மர குதிரை பேரணியை ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் ரோஹன் போபண்ணா ஜோடி முன்னேறியுள்ளது.

ஐபிஎல் கோப்பையை வென்ற குஜராத் அணி வீரர்களுக்கு அகமதாபாத்தில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

First published:

Tags: Headlines, MK Stalin, Today news, Top News