உண்ட வீட்டிற்கு துரோகம் செய்த முதல்வர் பழனிசாமி - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

யாராவது சொந்த வீட்டில் கொள்ளையடிப்பார்களா? ஆனால் முதல்வர் பழனிசாமி கோடநாடு விவகாரத்தில் உண்ட வீட்டிற்கு துரோகம் செய்துள்ளார் - மு.க.ஸ்டாலின்

உண்ட வீட்டிற்கு துரோகம் செய்த முதல்வர் பழனிசாமி - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
மு.க.ஸ்டாலின் பிரசாரம்
  • News18
  • Last Updated: April 13, 2019, 10:17 PM IST
  • Share this:
கோடநாடு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உண்ட வீட்டிற்கு துரோகம் செய்து உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

நாமக்கல் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின் போது பேசிய மு.க.ஸ்டாலின், மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி நூறு சதவீதம் வெற்றி பெறும். அதிமுக ஆட்சியை அனுப்ப வேண்டிய நிலையில் நாம் தேர்தலை சந்திக்க உள்ளோம். விவசாயிகளுக்காக எந்த ஒரு நலத்திட்டமாவது இந்த அரசு செய்துள்ளதா? என பலகுற்றசாட்டுகளை முன்வைத்தார்.

மேலும், ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் 2000 கோடி ரூபாய் பணம், தங்கம், வைரம் உள்ளிட்ட ஏராளமான நகைகள் உள்ளது. அதை கொள்ளையடிக்க கேரளாவிலிருந்து 13 பேரை இறக்குமதி செய்தார் முதல்வர் பழனிசாமி. அப்படி கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தான் தற்போது அதிமுக அரசு தேர்தலில் பயன்படுத்தி வருகிறது.


யாராவது சொந்த வீட்டில் கொள்ளையடிப்பார்களா? ஆனால் முதல்வர் பழனிசாமி கோடநாடு விவகாரத்தில் உண்ட வீட்டிற்கு துரோகம் செய்துள்ளார். இந்த வழக்கில் பலர் சந்தேகத்திற்கு உரிய வகையில் மரணம் அடைந்துள்ளனர். அதனை கண்டுபிடிக்க வேண்டும் இல்லையென்றால் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அதனை நாங்கள் கண்டுபிடிப்போம் என ஸ்டாலின் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் சமாதி அமைக்க இடம் தாருங்கள் என்று வெட்கத்தை விட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையைப்பிடித்து கெஞ்சினேன்.

ஆனால் அதிமுக அரசு கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுக்க மறுத்துவிட்டார்கள். அதிமுக அரசு மறுத்தாலும் இந்த விவகாரத்தில் சட்டரீதியாக நீதிமன்றத்தை நாங்கள் அணுகினோம். நீதிமன்றம் நேர்மையான தீர்ப்பை வழங்கி மெரினாவில் கருணாநிதி சமாதி அமைக்க அனுமதி வழங்கியது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.Also Watch

First published: April 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading