பிரதமர் மோடி ஏழைத்தாயின் மகன் என நீலிக்கண்ணீர் வடிக்கிறார் - ஸ்டாலின் விமர்சனம்

இந்தத் தேர்தலோடு திமுக காணாமல்போய்விடும் என்று தலைவர் ஒருவர் கூறிவருவதாகவும், திமுக-வை எந்தக் கொம்பனாலும் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது என ஸ்டாலின் தெரிவித்தார்.

Web Desk | news18
Updated: April 12, 2019, 6:32 PM IST
பிரதமர் மோடி ஏழைத்தாயின் மகன் என நீலிக்கண்ணீர் வடிக்கிறார் - ஸ்டாலின் விமர்சனம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
Web Desk | news18
Updated: April 12, 2019, 6:32 PM IST
தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நீலிக்கண்ணீர் வடிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

கடலூர் தொகுதி திமுக வேட்பாளர் ரமேஷ், சிதம்பரம் தொகுதி வேட்பாளர் திருமாவளவன் ஆகியோரை ஆதரித்து கடலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர், இந்தத் தேர்தலோடு திமுக காணாமல்போய்விடும் என்று தலைவர் ஒருவர் கூறிவருவதாகவும், திமுக-வை எந்தக் கொம்பனாலும் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது என்றும், அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்துபோவார்கள் என்றும் விளக்கம் அளித்தார்.

ஆட்சி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு ஓர் அடையாளமாக கருணாநிதி தலைமையிலான ஆட்சி இருந்ததாகவும், ஆட்சி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைந்திருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தற்போது புது முறையை கையாள்வதாகவும், மக்களின் அனுதாபங்களைப் பெறுவதற்காக தன்னை ஏழைத்தாயின் மகன் என்று கூறி நீலிக்கண்ணீர் வடிப்பதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.

Also Wach

First published: April 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...