தமிழகத்திலும் நீட் தேர்வை ரத்து செய்து 69 % இடஒதுக்கீடை அமல்படுத்தவேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகத்திலும் நீட் தேர்வை ரத்து செய்து 69 % இடஒதுக்கீடை அமல்படுத்தவேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

தமிழகத்திலும் நீட் தேர்வு ரத்து செய்துவிட்டு 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தவேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 • Share this:
  மத்திய அரசின் கீழ் உள்ள 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு தனியாக நுழைவுத் தேர்வு நடத்திக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது. அந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடியாது என்று துரோகம் செய்த மத்திய அரசு, தங்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் தனி நுழைவுத் தேர்வு என்ற அறிவித்திருப்பது ஏன்?

  தனி நுழைவுத் தேர்வு, தமிழக மாணவர்களுக்கு சித்தூரில் தேர்வு மையங்கள், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் 2,000 ரூபாய். ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பு மாணவர்களுக்கு 1,500 ரூபாய் என்பன அநீதிகளின் உச்சகட்டம்.

  முதுநிலை மருத்துவக் கல்விக்கான சேர்க்கையில், தனி இடஒதுக்கீடு அளிக்க முடியாது என்றவர்கள் தங்களின் நிர்வாகத்திலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் அந்தந்த நிறுவனங்களில் கடைபிடிக்கப்படும் இடஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ளலாம் என்று அனுமதிக்கும் முரண்பாடு ஏன்?

  மத்திய அரசின் கீழ் உள்ள 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு தனித் தேர்வு நடத்திக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கிவிட்டதால், நாடு முழுவதும் ஒரே தேர்வு என்று அறிமுகப்படுத்திய நீட் தேர்வினை ரத்து செய்திட வேண்டும். தமிழகத்திலுள்ள மருத்துவ மாணவர் சேர்க்கையும் 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நடைபெற்றிட அனுமதித்திட வேண்டும்.


  முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பிரதமருக்கு கடிதம் எழுதி உரிய அழுத்தம் கொடுக்கவேண்டும். தமிழகத்திலுள்ள 584 மருத்துவ உயர் சிறப்பு படிப்புகளுக்கான கவுன்சிலிங்கை அ.தி.மு.க அரசு யாருக்காக பயந்து நடத்தாமல் இருக்கிறது? உடனடியாக நடத்தி அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத உள் இடஒதுக்கீட்டை தமிழகத்திலுள்ள இட ஒதுக்கீட்டுக் கொள்கை அடிப்படையில் வழங்கவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
  Published by:Karthick S
  First published: