திண்டுக்கல்லில் மு.க.ஸ்டாலின் வீதி வீதியாக நடந்து சென்று பிரச்சாரம்

மு.க.ஸ்டாலின்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திண்டுக்கல்லில் என். பாண்டி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

 • Share this:
  திண்டுக்கல்லில் திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீதி வீதியாக நடந்து சென்று  மக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.

  தமிழகத்தில் அடுத்த மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திண்டுக்கல்லில் என். பாண்டி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

  இவருக்கு ஆதரவாக நாமக்கலில் இருந்து திண்டுக்கலுக்கு வருகை தந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மெயின் ரோடு, மணிக்கூண்டு, ஆர்.எஸ். ரோடு, ஆகிய வீதிகளில் வேட்பாளருடன் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.

  அப்பொழுது அங்கிருந்த பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்தனர்.  திமுக தலைவர், வேட்பாளருடன் திடீரென நடந்து வந்து பொதுமக்கள் மத்தியில் வாக்குகள் சேகரித்தது பொதுமக்கள் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்தியது.

  Must Read : செல்லூர் ராஜூ-விடம் கார் இல்லையாம், ஆனால் என்னிடம் ஆட்டோ உள்ளது - மதுரை மார்க்சிஸ்ட் வேட்பாளர் பொன்னுத்தாயி

   

  மு.க.ஸ்டாலினுடன் திமுக முன்னாள் அமைச்சரும் ஆத்தூர் தொகுதி வேட்பாளருமான ஐ. பெரியசாமி, பழனி வேட்பாளர் செந்தில் குமார், ஒட்டன்சத்திரம் வேட்பாளர் சக்கரபாணி ஆகியோர் உடன் வந்தனர்.
  Published by:Suresh V
  First published: