வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் பங்கேற்கவேண்டும் - மு.க.ஸ்டாலின் அழைப்பு

வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் பங்கேற்கவேண்டும் - மு.க.ஸ்டாலின் அழைப்பு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
  • News18 Tamil
  • Last Updated: September 27, 2020, 11:40 PM IST
  • Share this:
கரூர் மாவட்டம் திமுக சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், காணொளிக் காட்சி மூலம் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விவசாய நாடான இந்தியாவில் போடப்படும் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக உள்ளன எனக் கூறினார்.

வேளாண் சட்டத் திருத்த மசோதாவை ஆதரிக்கும் முதலமைச்சரின் செயல் விவசாயிகளுக்கு எதிரானது என்று குற்றம்சாட்டிய ஸ்டாலின், விவசாய மசோதாவை ஆதரித்ததால்தான் பிரதமர் மோடி முதலமைச்சரை பாராட்டுவதாகக் கூறினார்.

Also read: கொரோனா போரில் ஐ.நா பங்கு? - பிரதமர் மோடி கேள்வி


ஊழல் நிறைந்த ஆட்சி தற்போது நடைபெறுவதாக சாடிய ஸ்டாலின், மத்திய அரசின் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி திங்களன்று திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற உள்ளதாகவும், இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். மேலும், பாஜகவின் கூட்டணியில் இருந்த சிரோன்மணி அகாலிதளம் நாளை போராட்டத்தில் பங்கேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுக்காட்டினார்.
First published: September 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading