'மத்திய தொல்லியல் பட்டயப்படிப்புக்கான அறிவிக்கையில் தமிழ் புறக்கணிப்பு' - மு.க. ஸ்டாலின் கண்டனம்..

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

மத்திய தொல்லியல் பட்டயப்படிப்புக்கான அறிவிக்கையில் தமிழ் புறக்கணிப்பதாகவும் தமிழ், தமிழர் நலன் புறக்கணிப்பைத் தொடர்ந்து வரும் இந்திய ஒன்றியத்தின் பிற்போக்குத்தனத்திற்கு எதிராக அனைவரும் இணைந்து குரல் எழுப்ப வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  • Share this:
    திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாழ்படுத்தி ஒருமைப்பாட்டினை உருக்குலைப்பது ஒன்றையே மத்திய பாஜக அரசு கொள்கையாக கொண்டிருக்கிறது. இந்திய கலாச்சாரம் பற்றி ஆய்வசெய்ய அமைத்த 16 பேர் குழுவில் தமிழர்கள் உள்ளிட்ட தென்னகத்தினர் - சிறுபான்மையினர் - பட்டியலினத்தவரைப் புறக்கணித்தார்கள். கண்டித்தோம்!

    தற்போது மத்திய அரசின் தொல்லியல் பட்டயப்படிப்பிற்கான அறிவிக்கையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் தொல்லியல் சான்றுகளில் 60% மேலான சான்றுகளைக் கொண்டு விளங்கும் தமிழைத் திட்டமிட்டுத் தவிர்த்திருப்பது தமிழ் மொழியின் மீதான பண்பாட்டுப் படையெடுப்பு” என்று கூறியுள்ளார்.

    Also read: கோவை: தங்க நகைப்பட்டறை தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை..



    மேலும், “தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக மண்ணின் மைந்தர்களுக்கான வேலை வாய்ப்புகள் அருகி வருகிறது. ரயில்வே , மின்வாரியப் பணிகள், ஊட்டி ஆயுதத் தொழிற்சாலை உள்ளிட்டவற்றில் வடமாநிலத்தவர் அதிகமாக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து நீதிபதிகள் அதிருப்தி குரல் வெளிப்படுத்தியுள்ளனர்.

    மத்திய அரசின் இந்தித் திணிப்பு மற்றும் தமிழர் நலன் புறக்கணிப்புக்குத் துணை போகும் அடிமை அதிமுக ஆட்சியின் அவலங்களையும் அம்பலப்படுத்துவோம்.
    Published by:Rizwan
    First published: