ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்து, வாக்கு சேகரிக்க உள்ளார். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தொடர் பிரச்சாரத்தை மு.க. ஸ்டாலின் இன்று தொடங்குகிறார். அதன்படி, மார்ச் 15-ஆம் தேதி (இன்று) திருவாரூரில் தொடங்குகிறார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும், தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதற்கட்டமாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த மண் திருவாரூரில் தொடங்குகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சார அட்டவணை:

Must Read : உதய சூரியனே தி.மு.கவின் வெற்றி முழக்கம் - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.