Home /News /tamil-nadu /

உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை விரைந்து மீட்கக்கோரி வெளியுறவு அமைச்சரிடம் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை விரைந்து மீட்கக்கோரி வெளியுறவு அமைச்சரிடம் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ரஷ்யா போர் நடத்தி வரும் உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை விரைந்து மீட்கக்கோரி வெளியுறவு அமைச்சரிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது- உக்ரைனில் உள்ள மாணவர்களை விரைவில் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வருவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.  இது தொடர்பாக இன்று (28-2-2022) ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர்ஜெய்சங்கர் அவர்களுடன் முதலமைச்சர் அவர்கள் தொலைபேசியில் உரையாடினார்.

    அப்போது உக்ரைனில் உள்ள தமிழ் மாணவர்கள் குறித்த விபரங்களை தெரிவித்து அவர்களுக்குத் தேவையான உணவு, இருப்பிட வசதி, பாதுகாப்பு போன்றவற்றை உறுதி செய்வதோடு விரைவில் அவர்களை மீட்டுக்கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்றும், இதற்கென தனி அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டுமென்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

    இதையும் படிங்க - பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் கடிதம்
    தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களை விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறதெனவும், விரைவில் அவர்கள் மீட்டுக்கொண்டு வரப்படுவார்கள் எனவும் மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு உறுதியளித்துள்ளார். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



    ரஷ்யா போர் நடத்தி வரும் உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தற்போது வரை 5 விமானங்கள் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்டு இந்தியா கொண்டு வந்துள்ளது.



    உக்ரைனில் விமானப் போக்குவரத்து தடை நீடிப்பதால், அங்கிருக்கும் இந்தியர்கள் ரயில் மூலமாக உக்ரைன் எல்லைப் பகுதிக்கும், அங்கிருந்து அண்டை நாடுகளுக்கும் கொண்டு வரப்படுகின்றனர். அங்கிருந்து விமானம் மூலமாக இந்தியா அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

    இந்தப் பணியில் மத்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மீட்பு நடவடிக்கைகளை வேகப்படுத்துவதற்காக 4 அமைச்சர்களை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: MK Stalin

    அடுத்த செய்தி