வேலுமணி வெளிப்படையாகவும், தங்கமணி சைலண்டாகவும் ஊழல் செய்வார்கள் - மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

உள்ளாட்சி துறை அமைச்சரை, உள்ளாட்சி துறை அமைச்சர் என சொல்லாமல் ஊழல் ஆட்சி துறை என்றுதான் கூறவேண்டும்...

 • Share this:
  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக சார்பில் 6 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சூளகிரி ரவுண்டான பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அப்போது பேசுகையில், வேலுமணி வெளிப்படையாகவும், தங்கமணி சைலண்டாகவும் ஊழல் செய்வார்கள் என்றும் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் முந்திரிகொட்டை எனவும் கூறினார்.

  கிருஷ்ணகிரி வேட்பாளர் டி.செங்குட்டுவன், பர்கூர் வேட்பாளர் டி.மதியழகன், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி (காங்கிரஸ் கூட்டணி) வேட்பாளர் ஆறுமுகம், வேப்பனஹள்ளி வேட்பாளர் பி.முருகன், ஓசூர் தொகுதி வேட்பாளர் பிரகாஷ், மற்றும் தளி சட்டமன்ற தொகுதி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி ) வேட்பாளர் ராமச்சந்திரன் ஆகிய வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

  நான் ரெடி நீங்க ரெடியா என்று கூறியபடி தனது உரையைத் தொடங்கினார் ஸ்டாலின், தெடர்ந்து பேசிய அவர், “உங்களை தேடி, உங்களை நாடி உரிமையோடு உங்களில் ஒருவனாக வந்துள்ளேன். கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செங்குட்டுவனை மீண்டும் மக்கள் தேர்வு செய்ய உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

  ஓசூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ் மீண்டும் தேர்வாக உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். வேப்பனஹள்ளி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ள முருகனுக்கு மீண்டும் வாக்களித்து தேர்வு செய்ய வேண்டும். பர்கூர் தொகுதியில் போட்டியிடும் நல்ல பன்பாளர் மதியழகனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மாபெரும் வெற்றியை தேடி தர வேண்டும். ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ஆறுமுகம் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும், அதேபோல் தளி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ராமசந்திரன் அவர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

  தமிழகத்தின் நுழைவு வாயில் என போற்றப்பட்ட மாவட்டமான கிருஷ்ணகிரியில் வாக்கு கேட்டு வந்துள்ளேன். கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஒகேனக்கல் கூட்டு குடி நீர் திட்டம் தந்த உரிமையில் வாக்கு கேட்டு வந்துள்ளேன். அதிமுக சார்பில் இந்த தொகுதியில் போட்டியிடும் கே.பி.முனுசாமி அமைச்சராக இல்லாமலேயே அமைச்சராக செயல்பட்டுகொண்டு இருக்கிறார்.

  கே.பி.முனுசாமியை அதிமுக-வினர் 30% முனுசாமி என்றுதான் அழைப்பார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தான் கே.பி.முனுசாமிக்கு புது வாழ்வு கிடைத்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின் நியாயம் கேட்டு உண்ணாவிரதம் இருந்தார் கே.பி.முனுசாமி ஆனால் தற்போது அவர்களிடம் ஒட்டிகொண்டு உள்ளார்.

  ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியை மிரட்டி பதவி வாங்கி கொண்டார் கே.பி.முனுசாமி. தற்போது ஜெயலலிதா மறைவுக்காக நியாயம் கேட்பதை மறந்து விட்டார். பழனிச்சாமி அரசு கடும் பயங்கரமாக ஊழல் செய்யும் கமிஷன், கரப்ஷன் அரசாக இருக்கிறது. இவர்கள் ஊழல் குறித்து ஆதாரங்களுடன் ஆளுனர் இடம் புகார் கொடுத்துள்ளோம்.

  நெடுஞ்சாலை துறை டெண்டர் பழனிச்சாமி சம்மந்திக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது என நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டதை அடுத்து வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ விசாரணைக்கு பழனிச்சாமி தடை உத்தரவு வாங்கி உள்ளார் தடை வாங்க வில்லை என்றால் சிறையில்தான் இருந்து இருப்பார்.

  உள்ளாட்சி துறை அமைச்சரை உள்ளாட்சி துறை அமைச்சர் என சொல்லாமல் ஊழல் ஆட்சி துறை என்றுதான் கூறவேண்டும். கொரோனா தொற்று நோயை பயன்படுத்தி கொள்ளையடித்த ஆட்சி தான் தற்போது நடந்து வருகிறது. மாஸ்க், துடைப்பம் ஆகியவற்றில் பல கோடி கொள்ளையடித்தார்கள்.

  வேலுமணி வெளிப்படையாகவும், தங்கமணி சைலண்டாகவும் ஊழல் செய்வார்கள். மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் முந்திரிகொட்டை. அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட வெற்றிபெற கூடாது அவ்வாறு வந்தால் அவர்கள் அதிமுக எம்.எல்.ஏ. கிடையாது பாஜக எம்.எல்.ஏ-வாக இருப்பார்கள். குட்கா மக்களுக்கு தாராளாம விநியோகம் செய்யும் சூழலை விஜயபாஸ்கர் ஏற்படுத்தி போலீஸ் துணையுடன் கொள்ளையடித்து உள்ளனர்.

  ஊழலுக்காக ஊழல் வாதிகள் நடத்தும் கேபினட் நடு நிலையோடு உள்ள அறப்போர் இயக்கும் தெளிவாக குறுப்பிட்டு உள்ளனர். அதில் குறுப்பிட்ட டெண்டர் சிலருக்கு தான் கிடைக்கும் என தெரிவித்து உள்ளார்கள். அதே போல்தான் டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆட்சி முடியும் தருவாயில் 3000-5000 கோடி கொள்ளையடித்து உள்ளார்கள். திமுக ஆட்சி அமைந்த உடன் ஊழலை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.

  Must Read : ‘அரசியலில் உச்சகட்ட துரோகம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது’ - ஓ.பன்னீர்செல்வம்

   

  காவேரி உரிமை பாதுகாக்க முடியவில்லை. நீட் தேர்வை தடுக்க முடியவில்லை. பழனிச்சாமி ஆட்சியில் யாரும் நிம்மதியாக இல்லை. மின் கட்டணம், பால் விலை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு விஷம் போல் ஏறியுள்ளது. இந்த ஆட்சியின் கொடுமையை விட இந்த வெயில் பெரிதல்ல என நீங்கள் இங்கு நிற்கின்றீர்கள். மூன்று விவசாய சட்டத்தை திரும்ப பெற ஆட்சிக்கு வந்த உடன் முதல் தீர்மானமாக நிறைவேற்றப்படும். கூட்டுறவு வங்கியில் விவசாய கடன், 5 பவுனுக்கு உட்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்படும்.” இவ்வாறு கூறினார்.
  Published by:Suresh V
  First published: