• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது தீவிர நடவடிக்கை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது தீவிர நடவடிக்கை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

போலீஸ் - மாதிரிப்படம்

போலீஸ் - மாதிரிப்படம்

காவல்துறை ஆணையம் விரைவில் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 • Share this:
  காவலர்கள் நலம் பேணுவதில் திமுக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது என்று தமிழக சட்டப்பேரவையில் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது தீவிர நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கும் என்றும், காவல்துறை ஆணையம் விரைவில் அமைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

  இது குறித்து முதலமைச்சர் பேசுகையில், விமர்சனங்கள் மூலமாக நல்ல கருத்துக்களை வழங்கியதற்காக தனது நன்றியை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எங்கு சட்டம்-ஒழுங்கு சீராக இருக்கிறதோ, அங்கு சட்டங்கள் சிறப்பாக கடைப்பிடிக்கப்படுகிறது. நாட்டின் சமுதாய வாழ்விற்கு காவல் துறை சிறப்பாக இருக்க வேண்டும் என்று அண்ணா குறிப்பிட்டு காட்டியுள்ளார்.

  ஆங்கில நாளோடுகள் இந்த ஆட்சியை பாராட்டி வருகின்றன. திராவிட மாடல் வளர்ச்சி என தலையங்கம் வந்துள்ளன. தமிழக நாளித்ழகளும் முதலமைச்சரையும், அரசையும் பாராட்டி வருகின்றன. முன்னேற்றத்தை நோக்கியே இந்த அரசு போய் கொண்டு இருக்கிறன. இந்த ஆட்சியில் வன்முறை இல்லை, சாதி சண்டைகள் இல்லை, துப்பாக்கி சூடு இல்லை, அராஜகம் இல்லை. இதை ஏற்படுத்தி கொடுத்த காவல் துறைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனாவில் உயிரை பணயம் வைத்து பாதுகாத்தார்கள். அவர்கள் பணிக்கு ஈடு இணை எதுவும் கிடையாது.

  ஸ்டெர்லைட் , 8 வழிச்சாலை உள்பட பல போராட்டங்களில் போடப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது, 5570 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. ஆறுமுகசாமி ஆணைய விசாரணையை விரைவில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 700 ஆயுள் தண்டனை கைதிகளை, முன் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும்.

  புகார் எழுந்ததும் எவ்வித தயவு தாட்சண்யம் காட்டாமல் யாரா இருந்தாலும் இந்த அரசு கைது செய்யும் நடவடிக்கையை எடுக்கிறது. பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. நவின தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் காவல் துறை நவீனமையமாக்கப்படும். போலீஸ் அகாடமியில் புதிய பயிற்சிகள் வழங்கப்படும். உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஓய்வுபெற்ற காவலர்களுக்கு நல வாரியம் அமைக்க கோரிக்கை விடுத்தார். நலவாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  நயினார் நாகேந்திரன் உதவி ஆய்வாளர் பதவி உயர்வு குறித்து பேசினார். அதிமுக ஆட்சியில் ஓய்வுபெறும் வயது வரம்பு உயர்த்தியதாக அறிவித்தனர். அதனால் பதவி உயர்வு வழங்குவது காலதாமதம் ஆகிறது. இருப்பினும் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆவடி, தாம்பரம் தலைமையிடமாகக் கொண்டு தனித்தனி காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும். சாதி, மதம், கட்சி பார்க்காமல் நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறையினருக்கு அறிவுருத்தல் வழங்கப்பட்டுள்ளது.

  Must Read : 5 பவுன் வரையிலான கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

  தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்யக்கூடிய குற்றங்கள் அதிகரிப்பு. நவீன வழிமுறைகளை கொண்டதாக காவல்துறை மாற்றியமைக்கப்படும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த, பராமரிக்க தனி நிதி அமைக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது தீவிர நடவடிக்கையை இந்த அரசு எடுக்கும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Suresh V
  First published: