சென்னை ராயப்பேட்டையில் நடைப்பெற்று வரும் தென்னிந்திய திருச்சபையின் பவளவிழா கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார். அப்போது, ஒற்றுமை சகோதரத்துவம் அனைவரும் சமம் ஆகிய உன்னத நோக்கை நிறைவேற்றும் தென்னிந்திய திருச்சபைக்கு இதய பூர்வமான நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம் எனவும் கூறினார்.
கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். தென்னிந்திய திருச்சபை கடந்த 1947ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி தொடங்கியது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களை உள்ளடக்கி, 24 பேராயர்களும், 40 லட்சம் நேரடி உறுப்பினர்களை கொண்டு தென்னிந்திய திருச்சபை செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில், 75வது ஆண்டு தொடக்க விழாவை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்து பவள விழா இலச்சினையை வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில், திருச்சபையின் பிரதம போராயர் தர்மராஜ் ரசாலம், துணை பிரதம பேராயர் ரூபன் மார்க், திருச்சபையின் பொது செயலாளர் பெர்னாண்டஸ் ரத்னராஜா, பொருளாளர் விமல்குமார், அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலன், இனிக்கோ இருதயராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இன்றைக்கு தமிழகத்தில் நடைபெற்று வரக்கூடிய அரசு, உங்களால் உருவாக்கப்பட்ட அரசு. ஒற்றுமை சகோதரத்துவம் அனைவரும் சமம் ஆகிய உன்னத நோக்கை நிறைவேற்றும் தென்னிந்திய திருச்சபைக்கு இதய பூர்வமான நல்வாழ்த்துக்கள். திறந்த உலகின் சிறந்த திருசபை. நாடும் முழுவதும் கல்வி நிறுவனங்களை உருவாக்கி அனைவருக்கும் கல்வி எனும் இலக்கை நிறைவேற்றி வரும் இந்த திருச்சபை இந்தியாவின் கருவூலம்.
Must Read : ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்கள் : மெகா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
இன்று தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசு உங்களால் உருவான அரசு. தேர்தல் நேரத்தில் போட்டியிடும் கட்சிகள் வாக்குறுதிகளை வழங்குவது வழக்கம் ஆனால் திமுக-வை பொறுத்தவரையில் சொன்னதை செய்வோம். தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த 500 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 200 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம்” என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: MK Stalin, News On Instagram, TN Govt