பள்ளிகள், கல்லூரிகள் அருகே போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் தண்டனை -மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

குட்கா, பான்மசாலா போன்ற பொருட்களுக்கான தடை சட்டத்தில் மேலும், திருத்தம் கொண்டு வந்து முற்றிலும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  • Share this:
    பள்ளிகள், கல்லூரிகள் அருகே போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் தண்டனை விதிக்கும் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது அளித்த பதிலுரையில் தெரிவித்துள்ளார்.

    தமிழக சட்டப்பேரவையில் பாமக தலைவர் கோ.க.மணி, போதை பொருட்கள் விற்பனையை தடுப்பு நடவடிக்கை எடுத்தாலும் பள்ளி கல்லூரிகளுக்கு முன்னர் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறது. இது சாதாரணமானது அல்ல, பான்மசாலா, குட்கா போன்ற பொருட்கள் வடமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இது உற்சாகத்தை கொடுக்கும் என நம்பி மாணவர்கள் இதற்கு அடிமையாகி விடுகின்றனர்.

    பான்மசாலா, குட்கா போன்ற பொருட்களுக்கான தடை சட்டத்தில் மேலும், திருத்தம் கொண்டு வந்து முற்றிலும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை மட்டுமன்றி தமிழகம் முழுவதும் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினார்.

    அதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மூலம் 3,413 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும்.

    போதை மனமயக்கும் பொருட்கள் தடைச்சட்டம் 1985 கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும், பள்ளி கல்லூரிகளுக்கு அருகே போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்டத்தில் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

    Must Read : திட்டமிட்டப்படி நாளை பள்ளி, கல்லூரிகள் திறப்பு - தமிழக அரசு

    மேலும், காவல்துறைக்கு ஊக்க ஊதியம், சிறப்பு பரிசு வழங்கப்படுமா என்று ஜி.கே.மணி கேள்வி எழுப்பினார். அதற்கு “அரசு என்றும் காவல்துறையை ஊக்குவிக்க தயங்காது, மேலும், பரிசீலித்து ஆராய்ந்து சிறப்பு செய்யமுடிமோ அந்த ரிவார்டும் நிச்சயம் செய்யும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Suresh V
    First published: