• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • MK Stalin : மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படுவோம்... பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறும் -மு.க.ஸ்டாலின்

MK Stalin : மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படுவோம்... பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறும் -மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

சென்னை கொளத்தூர் தொகுதியில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டான், வெற்றி சான்றிதழை மெரினா கற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார்.

  • Share this:
    தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி, பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டன.

    சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். அதிமுக சார்பில் ஆதிராஜாராம், அமமுக சார்பில் ஜெ.ஆறுமுகம், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஜெகதீஷ்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் கெமில்ஸ் செல்வா ஆகியோர் களமிறங்கினர்.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்து வந்தார். முடிவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றார் ஸ்டாலின். அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆதி ராஜாராம் 34,462 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார்.

    இதனைத் தொடர்ந்து, நள்ளிரவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற லயோலா கல்லூரிக்கு சென்ற மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக் கொண்டார்.

    மு.க.ஸ்டாலின்


    பின்னர், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்குச் சென்று வெற்றி பெற்ற சான்றிதழை வைத்து மரியாதை செலுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், “திமுகவின் வெற்றிக்கு வித்திட்ட அனைவருக்கும் நன்றி. மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம். 10 ஆண்டுகள் அடிப்படையில் வெளியிடப்பட்ட 7 அறிவிப்புகள் நிறைவேற்றப்படும். தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

    மு.க.ஸ்டாலின்


    எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி முறையாக தலைவரை தேர்ந்தெடுப்போம். கொரோனா பரவல் என்பதால் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறும். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி” என தெரிவித்தார்.

    Must Read : முட்டிமோதிய அதிமுக; கொரோனா இரண்டாம் அலையை திமுக எப்படி எதிர்கொள்ளும்? முன் நிற்கும் சவால்கள் என்ன?

     

    இந்நிலையில், திமுகவின் வெற்றியை உறுதி செய்தது முதல் பல்வேறு தரப்பினரும், தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்துகளை தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: