Home /News /tamil-nadu /

மக்கள்தான் எஜமானர்கள்... ஒரு ரூபாய் கூட சிந்தாமல் சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்

மக்கள்தான் எஜமானர்கள்... ஒரு ரூபாய் கூட சிந்தாமல் சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

MK Stalin : ஒரு ரூபாய் கூட  சிந்தாமல் சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்றும் அதுதான் சிறந்த நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாக அமைய முடியும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், வனத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் முன்று நாள் மாநாடு நேற்று துவங்கியது.
இரண்டாம் நாளான இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கூட்டத்தில் உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர்கள் தங்களுடைய மாவட்டங்களில் நிறைவேற்றக் கூடிய திட்டங்களை குறித்து கள நிலவரத்தை விரிவாக எடுத்துரைக்க வேண்டும். இந்த அரசினுடைய திட்டங்களை மக்களுக்கு சென்றடைகிறதா என்பது உறுதி செய்வது குறித்து அனைவரும் தங்களுடைய கருத்துக்களை இணைந்து தெரிவிக்க வேண்டும் என்றார்.

எங்களுக்கும் உங்களுக்கும் அதாவது, அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மக்கள்தான் எஜமானர்கள் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது என்று கூறிய முதலமைச்சர், ஆகவே ஒரு ரூபாய் செலவு செய்தால் அந்த ஒரு ரூபாய் சிந்தாமல் சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் அதுதான் சிறந்த நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாக அமைய முடியும். ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறைவேற்ற வேண்டிய சிறப்பு திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் கருத்துதெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பொருள்கள் கிடைக்கிறது, அது மஞ்சளாக இருக்கலாம், இயற்கை வளங்களாக இருக்கலாம் அவற்றை எப்படி மார்க்கெட் செய்வது, அரசுக்கு  வருமானம் பெறுவது என்பது குறித்தும் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு தொழில் குறுந்தொழில் அனைவருக்கும் பயனளிக்கும் கூடிய திட்டங்கள் குறித்தும் கருத்துக்களை ஆட்சியர் தெரிவிக்க வேண்டுமென கேட்டு கொண்டார்.

நேர்மையான நிர்வாகம் வெளிப்படையான நிர்வாகம் என்பதை மனதில் வைத்து  அதிகாரிகள் ஆலோசனையை சுதந்திரமாக கூறலாம். என்று கூறிய முதல்வர், அந்த வகையில் மாவட்ட ஆட்சியர்களின்  கருத்துக்களை கேட்பதற்கு தாம்  ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Must Read : படிப்பை தொடர முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்... சான்றிதழ்கள் உக்ரைனில் சிக்கிவிட்டன - தமிழகம் திரும்பிய மாணவர்கள் கோரிக்கை

இந்நிலையில், நேற்றைய கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் புதிய முதலீடுகள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, ஒரு லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் என்ற இலக்கை அடைந்து மாநிலத்தின் முன்னேற்றத்தை உறுதிசெய்ய சட்டம் ஒழுங்கு மிக மிக முக்கியம் என்றார். சட்டம், ஒழுங்கு சீராக இருப்பதை மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கு விஷயத்திலே நான் சமரசம் செய்துகொள்ளமாட்டேன் எனவும் உறுதிபட தெரிவித்தார்.

Also Read : கூகுள் பே பயன்படுத்தி மாமூல் வசூல் செய்யும் போலீஸ் - வைரலான வீடியோ

மேலும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப்பொருள் குற்றங்கள், பொருளாதார குற்றங்களை அரசு அனுமதிக்காது. மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கக் கூடிய வகையில் யார் செயல்பட்டாலும் தயவுதாட்சண்யம் இன்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் மிகுந்த கவனத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது. நாசகார சக்திகள் எந்த வடிவிலும் தலைதூக்க நாம் அனுமதித்து விடக்கூடாது என்றார்.

Read More : கன்னியாகுமரி மீனவர்கள் 25 பேர் செஷல்ஸ் கடற்படையால் சிறைபிடிப்பு

அத்துடன், எல்லோரும் ஓரினம், எல்லோரும் ஓர் குலம் என்ற சமத்துவ சமூகமே நமது அரசின் குறிக்கோள் என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, மோசடி, நில அபகரிப்பு போன்ற பொதுமக்களை பாதிக்கக்கூடிய செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களை ஒடுக்குவதில் காவல்துறை எந்தவித பாரபட்சமும் காட்டக்கூடாது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கிற்கும் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கக்கூடிய சமூகவிரோத சக்திகளை கூலிப்படைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Suresh V
First published:

Tags: MK Stalin, TN Govt

அடுத்த செய்தி