மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டோம் என்பதாலேயே முதலமைச்சர், அமைச்சர்கள் அதிகளவில் ஊழல் செய்கின்றனர் - ஸ்டாலின் குற்றச்சாட்டு!

திமுக தலைவர் ஸ்டாலின்

வருடத்திற்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக தவறான வாக்குறுதிகளைக் கூறி ஆட்சிக்கு வந்த, பாஜக அரசுக்கு அதிமுக அரசு அடிபணிந்து செயல்படுவதாகவும் ஸ்டாலின் விமர்சித்தார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டோம் என தெரிந்ததாலேயே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடன் உள்ள அமைச்சர்கள், வரும் வரை லாபம் என அதிகளவில் ஊழல் செய்வதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

  திருவாரூர் மாவட்ட, நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற, திமுக சார்பிலான மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசியவர், திமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டதை குறிப்பிட்டார். மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான தனிக்குழு அமைத்து கண்காணித்து குறைகள் நிவர்த்தி செய்யப்படும் எனக் கூறினார்.

  மேலும், மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டோம் என அறிந்தே, எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருக்கு கீழ் உள்ள அமைச்சர்கள் வரும் வரை லாபம் என ஊழல் செய்வதாகவும் கூறினார்.

  Also read... தமிழகத்தில் 2 கட்டங்களாக தேர்தலா? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

  கிராமசபைக் கூட்டத்தில் மக்களின் குறைகளையும் ஸ்டாலின் கேட்டறிந்தார். பின்பு பேசிய அவர், எடப்பாடி பழனிசாமிதான் விவசாயி எனக் கூறிக்கொண்டு துரோகம் செய்வதாகவும், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் 5,36,000 மெட்ரிக் டன் அரிசியை வெளிச்சந்தையில் விற்று ஊழல் செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

  வருடத்திற்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக தவறான வாக்குறுதிகளைக் கூறி ஆட்சிக்கு வந்த, பாஜக அரசுக்கு அதிமுக அரசு அடிபணிந்து செயல்படுவதாகவும் ஸ்டாலின் விமர்சித்தார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: