ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததால் மோடி ஆத்திரம்: ஸ்டாலின் குற்றசாட்டு!

முக ஸ்டாலின்

திமுக இந்துகளுக்கு எதிரான கட்சி என்ற அவதூறு பிரசாரங்களை பாஜக மேற்கொண்டு வருவதாகவும் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  ராகுல் காந்தியை தாம் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததால், தம் மீது எரிச்சலும் கோபமும் அடைந்துள்ள பாஜக, இந்து மதத்திற்கு எதிரான கட்சி திமுக என்று பொய் பிரசாரம் செய்து வருவதாக மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

  திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஞானதிரவியத்தை ஆதரித்து பாளையங்கோட்டையில் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

  இதில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தியை தாம் பிரதமர் வேட்பாளராக முன்மொழிவேன் என மோடியும், பாஜகவும் எதிர்பார்க்கவில்லை என கூறினார்.

  அதனாலேயே திமுக இந்துகளுக்கு எதிரான கட்சி என்ற அவதூறு பிரசாரங்களை பாஜக மேற்கொண்டு வருவதாகவும் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

  ஆடு வளர்க்கிறேன், மாடு வளர்க்கிறேன் எனக் கூறும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களை வளர்த்தாரா? எனக் கேள்வி எழுப்பிய ஸ்டாலின், சசிகலா செய்த மிகப்பெரிய தவறு, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கியது தான் என்றும் விமர்சித்தார்.

  Also see...


  தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.  Published by:Vinothini Aandisamy
  First published: